Advertisement

முத்தரையர் வாழ்வியல் வரலாறு / History of Mutharaiyar Dynasty

முத்தரையர் அரச பரம்பரை

( குலம், கோத்திரம் ).


Mutharaiyar


   பழம்பெரும் வரலாற்று பெருமையோடு வாழும் தமிழினத்தின் மூத்த தலைமுறை மக்களாக தமிழகத்தில் முத்தரையர் எனும் ஆதி-அரச பேரினம் பல மாவட்டத்தில் வாழ்ந்துவருகின்றனர். அத்தகைய அரச பழங்குடி மக்களை தொடர்பு படுத்தும் முறை ஆய்வுகளில், அவர்தம் மக்களின் குலதெய்வ வழிபாடு, மணஉறவு, பாரம்பரிய சடங்குகள் மூலமாக எளிதில் குடிமரபு தொடர்பை அறியமுடிகிறது.


முத்தரையர்

குலம்- கோத்திரம்:


குலம்

  சூரியகுலம் (அரசகுலம்)


உள்ளடக்கம் : ( சூரியகுல சத்ரியர்,

சூரிய வேளீர்குலம், உக்கிரகுல பாளையக்காரர் )



கோத்திரம் :


சிவ கோத்திரம், பெருமாள் கோத்திரம்.


1. சிவ கோத்திரம் - சிவ கண்ணப்ப கோத்திரம்.


உள்ளடக்கம் :

( அரச கோத்திரம்,

சத்திரிய கோத்திரம்,

கண்ணப்பர் கோத்திரம்,

வேளீர் கோத்திரம்,

முத்துராசா கோத்திரம்,

தனஞ்செய கோத்திரம் )...,



2. பெருமாள் கோத்திரம் -விஷ்ணு கோத்திரம்.


உள்ளடக்கம் :

சத்திரிய கோத்திரம்,

திருமங்கை ஆழ்வார் கோத்திரம்,

அரச கோத்திரம், ஆழ்வார் கோத்திரம் )..,


முத்தரையர் மக்கள் பெருமளவில் சிவகோத்திரம், கண்ணப்ப கோத்திரம், பெருமான் கோத்திரம் என்றே தமது பாரம்பரிய சடங்குகளில் கூறிக்கொள்கின்றனர்.




முத்தரையர் தொழில் :

1. அரசாட்சி (நாடாளுவது).

2. போர்புரிதல்.

3. முத்துகுளித்தல், மீன்பிடித்தல்.

4. வேளாண் தொழில்.

5. வீரத்தின் பாரம்பரிய வேட்டை (காவல்காரர்).

6. மருத்துவம்.

 

  முத்தரையர் எனும் அரச பழங்குடி வம்சாவளியினர் முற்கால வரலாற்றில் அம்மக்களின் வாழ்வியல் மற்றும் தொழில் உருவாக்கம் அடிப்படையில் ஆதி மீனவராக வலை கொண்டு கடல் அளந்து முத்துகுளிக்கும் வலைஞராகவும் (மீனவர்),

ஆதி தமிழனின் வீரமிக்க வேட்டை தொழில் மற்றும் காவல் வேட்டை, வலைபின்னி விலங்குகளை பிடிக்கும் அறிவுடையோராக வாழ்ந்தமையால், குறிஞ்சி முல்லை நிலப்பகுதியில் ஆதிதமிழ் வேட்டுவராகவும் குறிக்கப்படுகின்றனர்.


பண்டைய காலம் முதல் இன்றுவரை முதன்மை தொழிலாக கடல்அளந்து முத்துகுளிக்கும் மீனவராகவும், வேளாண்மையையும் தொழிலாக கொண்டு வாழ்கின்றனர்.


முத்தரையர்
தனித்துவ குணங்கள் :

(Mutharaiyar Character)

1. விருந்தோம்பல்.

2. பரந்த உலக மனப்பான்மை.

3. பெரும் ஈகை குணத்தோர்.

4. தமக்கென வாழாது- பிறர்க்குரியாளர் எனும் கோட்பாடு.

5. என் கடன் பணி செய்து கிடப்பதே.

6. நீதிநெறி வழி நடத்தல்.

7. மான மாண்பு.

8. மனத்தூய்மை.

9. யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் என்னும் நிகரற்ற மனநிலை.

11. உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல் என்னும் உயர்ந்த இலட்சியம். 

12. உழைப்பே உயர்வென போற்றல்.

13. எல்லோரும் நம்மவரே–எல்லோரும் நல்லவரே’ எனும் சமத்துவ குணத்துடன் மற்றவர்களை அரவணைத்து வாழவைத்தல்.

          என்பன வலையர்குல முதுமக்களின் அகமாண்பில் தனி சிறப்புமிக்க குணங்களாக அனைவராலும் போற்றப்படுகிறது.



இவர்கள் சாதியினிலே நீதி வழங்கும் அம்பலகாரர் மக்கள் என்பதால் குற்றம்புரிந்தோர் எவராயினும், அவர் தம்குலமாயினும் தண்டனை பெற்றிட அறநெறியில் போராடும் முதன்மை பெருமக்கள் முத்தரையர்கள் ஆவார். (உதாரணமாக பல வரலாறும், நிகழ்வும் சான்றாக உள்ளன).


மானிடன் தவறு செய்துவிட்டால், தம்இனம், உறவு என மறைத்து, கயவர்களை பாதுகாக்கும் பிறமக்கள் மத்தியில், குற்றம் குற்றமே என தன்மான குணத்துடன் நீதிமாறாத அரசர்களாக வாழும் இம்மக்கள் மனுநீதிசோழர் குணத்துடைய நீதிமான்கள் இந்த அம்பலகாரர்கள் என கூறுவது தனிப்பெருமிதம்.


கால மாற்றத்தினால் பொருளாதாரம் செல்வாக்கு இழந்து, ஏழ்மையால் வாடினாலும் இன்றும் தானம், தர்மம், அறவழி, உழைப்பில் வாழ்வாதாரம் காணல் என அனைத்தும் ஒருுசேர கடைபிடித்தும், பிற மக்களையும் அரவணைத்து வாழ்கிறார்கள் இந்த நீதி அரசர்கள்.



இறை வழிபாடு :

முத்தரையர் மக்கள் துடியான காவல்தெய்வத்தையே காவல்கார வம்சத்தின் குலசாமியாக வழிபடுகின்றனர்.


பிடாரி.

கொற்றவை.

காளி தேவி.

கருப்பு.

அய்யனார்.

முனீஸ்வரன்.

வலச்சாமி.

வளவனார்.

அம்மன்.

பைரவர்.

போன்ற பல எல்லை தெய்வங்களையே குலத்தெய்வமாக கொண்டுள்ளனர்.


பெருமளவில்  காவுவாங்கும் தெய்வங்களை வழிபடும் முதன்மை சமுதாயமாக முத்தரையர் திகழ்கின்றனர்.


ஆடி மாதம் என்றாலே முத்தரையர்களின் மாதமாக குறிப்பிடுவதை அறியலாம்.

(இன்று பிற தமிழினங்களும் பெருவாரியாக ஆடிமாத குலதெய்வ வழிபாட்டை மேற்கொள்கிகின்றனர்).


ஆடி மாதம் வழிபாட்டில் தன்முன்னோர்களின் மரபை பின்பற்றி திருவிழா, தனித்துவ பைரவர் வழிபாடு, குலதெய்வ பூஜைகள் செய்வதை கொண்டும் இவர்கள் முத்தரையர்கள் இனத்தோர் என்று முன்னொரு காலத்தில் கூறும் வழக்கமும் உண்டு.


சித்திரை, வைகாசி, பங்குனி மாதங்களிலும் ஊர்சார்ந்து, குடிமக்கள் சார்ந்து தெய்வ வழிபாடு, திருவிழாக்களை கொண்டாடி, முதல்மரியாதையும் பெறுகின்றனர்.



பூஜை வழிபாடு :

       முத்தரையர்கள் சங்ககாலம் முதல் இன்று வரை சைவ-வைணவ வழிபாட்டில் தம்மை முழுமையாக அற்பணித்தவர்கள் ஆவர்.

சமயவேறுபாடின்றி முத்தரையர் மன்னர்கள் ஆன்மீகத்தை போற்றினார்கள்.

முத்தரையர் மக்களே பரவலாக பூசாரி சாதியாக அழைக்கப்படுவார். இறைபணியில் தன்னலம் பாராத சிறந்தோராக அம்பலபூசாரி என்று போற்றப்படுவார்கள்.

பெருமளவில் சிவன், பார்வதி, அம்மன், பிடாரி, விநாயகர், முருகன், பெருமாள் போன்ற தெய்வங்களுக்கு ஆலயம் எழுப்பி வழிபடுவார்கள்.


மணஉறவு முறை:


முத்தரையர்கள் தங்களது குலதெய்வ வழிபாட்டை முன்நிறுத்தி திருமண முறையை மேற்கொள்வார்.

தம் குலதெய்வ பூர்வீகத்தை வழிபாடாக கொண்டவர்கள் பங்காளி எனவும் அதில் பெண்கொடுத்து பெண் எடுக்கும் முறையை தவிர்ப்பவர்.


திருமணத்திற்கு முன்பு அரசவிவாக முறைப்படி கையில் வளரி, வேல்கம்பு கொண்டு காவல்காரர் உருமாகட்டி துணைவர தம்குல சடங்குகளை கடைப்பிடிப்பார்கள்.


ஒரே சாதிக்குழு- இனத்திற்குள் தன் மணஉறவை ஏற்படுத்திக்கொள்வார்கள். பொருளாதாரம் உச்சம் -குறைவு என்ற ஏற்றத்தாழ்வை விரும்பமாட்டார்.


வரதட்சணை என்ற கோட்பாடு கட்டாயமின்றி உறவார் விருப்பத்திற்கேற்ப மணமுடிப்பார்கள் இந்த மூத்தகுடி அரசகுலத்தார்.


முத்தரையர் குல
பாரம்பரிய சடங்குகள்:

1. ஆடி மாதத்தில் மொய்விருந்து எனும் குடிமரபு சடங்கை முத்தரையர்கள் கடைப்பிடிக்கின்றர்.

(பல இலட்சம் கணக்கில் மொய்வரவு பெற்ற முத்தரையர்களும் தஞ்சை, புதுக்கோட்டை பகுதிகளில் உண்டு).


2. மொய்செய்யும் வழக்கத்தில் இரட்டிப்பு மற்றும் அதிக தொகை செலுத்தும் பழக்கம் அம்பலக்காரர், வலையர் (முத்தரையர்) மேன்மக்களிடம் உண்டு.


3. தம் இல்லம் தேடி தன்இடம் வந்தோர்க்கு அளவில்லா தாணமும், இயல்பான ஈகை குணமும் பாரம்பரியமாக கொண்டிருப்பார்.


4. தமது இல்லத்திற்கு அயலார் வருகை தந்தாலோ, உறவாக தங்கிட நேர்ந்தாலோ - அவர்கள் செல்கையில் வெற்றிலையுடன் காசு மற்றும் பொருள்கள் கொடுத்து வழியனுப்புவதை அம்பலக்காரர் குடிமக்கள் தனித்துவ பாரம்பரியமாக  கொண்டுள்ளனர்.


5. முற்காலத்தில் மரபுபாராது பிற அரசர்களோடு மணஉறவு கொண்டாலும்,  தற்காலத்தில் பிறஇனத்தாரோடு  மணமுடித்தால் எவ்வித வரவும் ஏற்காது- அதை தம்மேன்மக்களின் இழுக்காக கருதுவார்கள்.


6. குலதெய்வ சந்நிதியில் ஆண்கள் தலைஉருமா கட்டி நிற்க, பெண்கள் தம் உற்றார் சூழ கை-கோர்த்து இனப்பெருமை போற்றி கும்பி பாடல்களை பாடிமகிழ்வார்கள்.


7. தன் உடன்பிறந்த பெண்களுக்கு தன்காலம் முடியும் வரை வரிசை (பொறந்தவீடு மற்றும் பொறந்தவன் சீர்) என்பதை தமிழர்மாண்பாக கடைப்பிடிப்பார்.


8. ஆடிமாதம் முதல்நாள் மட்டும் காவல்கார முன்னோர் வீரச்சடங்கு போற்றிட,

 தலைஉருமா கட்டி ராஜதோரணையில் கையில் ஈட்டி, வேல்கம்பு, வேட்டை ஆயுதம் கொண்டு  காட்டுவிலங்கு வேட்டையாடி தெய்வங்களை வழிபடும் தம்வேட்டுவ பாரம்பரியத்தை சிலர் தொன்மமாய் கொண்டுள்ளனர்.

(குறிப்பு : காலநிலை மாற்றத்தால் தம் பாரம்பரியத்தை  வனஅதிகாரிகளின் கண்காணிப்பில் கொடியவிலங்கை வீழ்த்துவது போல் பாசாங்கு வேட்டையை மட்டுமே பின்பற்றுகின்றனர்).


9. மாசி மாதம் சிவராத்திரி தினத்தில் தலை கரகம் ஏந்தி, மறுநாள் தீச்சட்டி (அக்னி) ஏந்தி ஊர்திருவிழாவினை தொன்றுதொட்டு நடத்திவருவார்.


சிவனையும்- கண்ணப்ப நாயனாரையும் பக்தியாய் கொண்டு காப்புகள் கட்டி, இச்சடங்கு பாரம்பரியம் முத்தரையர் மக்கள் வாழும் பகுதியில் மட்டுமே நடைபெறும் என்பதே இக்குடியான தனித்துவ பெருமை.

தமிழருள் தொன்ம பாரம்பரியத்தை கடைப்பிடிக்கும் முத்தரையர்கள் பெருவாரியாக அம்பலகாரர், அம்பலம், வலையர், சேர்வை, மூப்பமார், முத்துராசா, தலையாரி என்றே பிறர் மக்கள் அனைவரும் குறிப்பிட அறிகின்றோம்.


வரலாற்று பெருமையோடு வாழும் முத்தரையர் பழங்குடி மக்களின் வாழ்வாதாரம் வளர்ந்திட அருள்புரிய வேண்டுகிறோம் இறைவா.‌‌..!!

வாழ்க முத்தரையர் அரசமரபு...