Advertisement

வேலைவாய்ப்பு பதிவு புதுப்பித்தல் / 2021 Employment Renewal Update Opportunity

வேலைவாய்ப்பு புதுப்பித்தல்

( Employment Renewal opportunity )



வேலைவாய்ப்பு பதிவை புதுப்பிக்க தவறிய நபர்களுக்கு மிகவும் பயனுள்ள தகவல்.

2017 முதல் 2019 வரை வேலைவாய்ப்பு பதிவை புதுப்பிக்க தவறிய உறவுகளுக்கு இணையத்திலும், வேலைவாய்ப்பு அலுவலகத்திலும் புதுப்பிக்க முடியாமல் பலரும் தவித்துக் கொண்டிருந்தவர்களுக்கு இது ஓர் அறிய வாய்ப்பு.

ஏற்கனவே 2011, 2012, 2013, 2014, 2015 மற்றும் 2016 ஆண்டுகளில் புதுப்பிக்க தவறிய நபர்களுக்கு 2018 ஆம் ஆண்டு வேலைவாய்ப்பு பதிவை புதுப்பிக்க அரசாணை வெளியிட்டு சிறப்பு சலுகை அளிக்கப்பட்டது.

தற்போது மீண்டும் 28/05/2021 அன்று 2017, 2018, 2019 ஆண்டுகளில் புதுப்பிக்க தவறிய நபர்களுக்கு இந்த சிறப்பு சலுகை ஆணை வெளியிடப்பட்டுள்ளது‌.

இளநிலை பட்டப்படிப்பு (Any Degree, B.E, Arts, B.com Diploma....., etc ) மற்றும் மேற் பட்டப்படிப்புகளை (Any Degree, M.E, MBA, M.com...., etc ) முடித்த அனைவரும் கட்டாயம் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுங்கள்..




அரசு வேலை பெறுவதற்கு முக்கிய தகுதியாக, மூப்பு அடிப்படையில் பணி நியமனம் பெற வேலைவாய்ப்பு பதிவை தொடர்ந்து புதுப்பிக்க தவறாதீர்கள்.

முக்கிய குறிப்பு :
   இந்த வேலைவாய்ப்பு பதிவை புதுப்பிக்க 3 மாதம் மட்டுமே கால அவகாசம் உள்ளது.

Last date : 28/08/2021

உடனடியாக இணையதளம் Online Renewal மூலமாக உங்கள் வேலைவாய்ப்பு பதிவை புதுப்பித்துக் கொள்ளுங்கள்.

மேலும் முழு தகவல் அறிய கீழுள்ள லிங்க் கிளிக் செய்யவும்...



அரசு வேலை வாய்ப்புகளில் பின்தங்கிய முத்தரையர் அரசமரபை சார்ந்த உறவுகள் கட்டாயம் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

முத்தரையர் சமுதாயம் அனைத்திலும் விழிப்புணர்வு பெறுங்கள்.

அரசாண்ட வம்சமான முத்தரையர் சமுதாயத்தினர் வறுமையிலும், வேலைவாய்ப்பு இழந்தும் நிற்க நமது அறியாமை, முயற்சி இல்லாமை ஓர் காரணமாக உள்ளது.

அரசு வேலை வாய்ப்புகளில் பின்தங்கிய முத்தரையர் சமுதாயம் தனக்கான உரிமையை புரிந்து கொண்டு அனைத்து அரசு துறைகளில் வேலைவாய்ப்பு பெற வேண்டும்.

அதற்கு எப்போதும் வேலைவாய்ப்பு பதிவை புதுப்பிக்க வேண்டும்..
தயவுசெய்து உங்கள் வேலைவாய்ப்பு பதிவை புதுப்பித்து வைத்திருக்க வேண்டுகிறோம்.🙏

அலச்சியமே நமது அரசவம்சத்தின் அழிவுக்கு காரணமாக உள்ளது.

தவறவிடாதீர்கள்...💪

https://tnvelaivaaippu.gov.in/Empower/

வேலைவாய்ப்பு தகவல்கள் பற்றிய வேறு ஏதேனும் சந்தேகங்கள் மற்றும் வேலைவாய்ப்பு செய்திகளை அறிந்து கொள்ள அதிகாரப்பூர்வ இணையதளத்தை பார்க்கவும்...

https://tnvelaivaaippu.gov.in/index.html