Advertisement

வலையர் சரித்திரம் / VALAYAR History / History of Valaiyar caste

முக்காலம் போற்றும் முத்தரையர் குல "வலையமார்"களின் வீர வரலாறு


Veera valaiyar caste
வீரம் காத்த வலையர் பெருங்குடி மக்கள்.

வலையர் வரலாறு

History of Valaiyar :

              " வலையர்கள் "  தமிழ் வரலாற்றில் ஆதி அரசகுடி முத்தரையர் சமுதாயத்தின் மூத்த தலைமுறையாக சங்க இலக்கிய வரலாறுகள் கூறும் பழங்குடி மக்கள் ஆவார்கள்.  2000 வருடத்திற்கு முன்னரே வலையர் இனக்குழுவாக - ஆதி மீனவர்கள் (வலைஞர்) எனும் தொன்மையான அடையாளம் புகழுடன் திகழ்ந்த பெருமைமிகுந்த முதுதமிழர்கள் இவர்கள். தமிழினத்தின் மூத்தகுடி 'வலையர்கள்' பண்டைய பலநூறு ஆண்டுகளுக்கு முன்பே வலையையும், வளைதடியையும் (வளரி) உருவாக்கி தம் வாழ்வியலில் பயன்படுத்திய தமிழ் முன்னோர்கள் எனும் வரலாற்று சிறப்புமிக்கவர்.

ஆதி மீனவர்களான வலையர் மக்கள் தமிழினத்தின் தொன்ம தொழில்முறை கண்டறிந்து வலையினை வடிவமைத்து முதன்முதலில் முறையே கடலிலும், வளரியை உருவாக்கி முறையே களத்திலும், போர் தரணியிலும் வீசிய தனிச்சிறப்பு வரலாற்றுப் புகழ் உடையவர்கள். இந்த பழங்குடி வீரத்தமிழர்களை பற்றி ஆயிரம் ஆயிரமாய் வரலாற்று இலக்கிய சான்றுகள் புகழ்ந்து போற்றிய பெருமைகள் தமிழ் வரலாற்றிலே பல உண்டு.

இத்தகைய தனித்தோர் சிறப்புமிக்க வரலாற்றால் வலைஞர், வலையர்-வளவர், வலைஎறியர், வளரியர், வல்லமார், வலையான், வலையமார்கள்  என்ற புகழ்பெயர்களும் பெற்று பெருமைமிக்க மூத்தகுடியாக தமிழகம் உட்பட இந்திய திருநாட்டில் பெருவாரியாக வாழ்கின்றனர்.

சங்க இலக்கியங்கள் போற்றும்

 வலையர் பெருமை:


"முன்னை தமிழ்வேந்தருள் மூத்தவர் வலையரே - தரைதனைக் கடந்து முந்நீர் அளந்தமுத் திரையரே -பெருவலை கோல்வலை வரிவலை கொண்டு களத்தினில் சென்று கடல்தனில்மீனைப் பிடித்தோர் அவரே".


 "கடும்போர்க் களத்தினில் வளரியைச் சுழற்றி பகைவனை விரட்டியப் போர்மறவரும் அவரே".

"முத்தாய் முத்துகுளித்து ஆழ்கடல்தாண்டிய பெருவாணிகச் செல்வரும் அவரே".
                   
          என்பது முதுகுடி வலையர் பெருங்குடி மக்களின் தனித்தோர் சிறப்பு என்று 'பட்டினப்பாலை,  மதுரைக்காஞ்சி,  ஐங்குறுநாறு, பெரும்பாணாற்றுப்படை'  நூல் இலக்கியங்கள் மற்றும்  பண்டைய வரலாறுகளும் பெருமையுடன் இம்மக்களை போற்றுகிறது.

மேலும், சங்க நூல்களில் பெருமையாக வலையர் மாண்புகளின் தொகுப்பாக 
'வலைவர்- வலைஞர்- வலையார்'  இவையாவும் வலையர் என்ற சொல்மரபு வழக்கின் செய்யுள் வடிவம்  என்பதை அழகாய் சிறப்பித்து கூறப்பட்டுள்ளதை நாம் அறிவோம். அந்த வரலாற்று சுவடுகள் குறிப்பிட்டுள்ள ஆதாரங்களில் சில, 


“கோடை நீடினும் குறைப்பட வறியாத் தோடாழ்குளத்துக் கோடுகாத்திருக்கும் கொடுமுடி ‘வலைஞர்’ ”.
- (பெரும்பாணாற்றுப்படை தொகை பாடல்).

பாடலின் பொருள்
கோடை நீடித்தாலும் குறையாத ஆழமுள்ள குளத்தின் கரையினிலே மீன்பிடிக்க காத்திருக்கும் வலைஞர் (வலையர்).


மதுரைக் காஞ்சியில் இருந்து, 

“வண்டிரை கொண்ட கமழ்பூம் பொய்கை கம்புட் சேவல் இன்துயில் இரிய ‘வல்லை நீக்கி வயமீன் முகந்து கொள்ளை சாற்றிய கொடுமுடி வலைஞர் “.


பாடலின் பொருள் :
வண்டுகள் தங்கிய பூமணம் பொருந்திய பொய்கையிலே படர்ந்திருக்கும் வள்ளைக்கொடியை கம்புள் சேவலின் இனிய தூக்கம் களையும்படி நீக்கிவிட்டு வலையை விரித்து கொழுத்த மீன்களை பிடித்து விற்கும் பெரும்வணிகரே வலையர்.


ஐங்குறுநூறின் அம்மூவனார் பாடிய நெய்தல் திணையில் வரும் பாடல்,

“சிறுநணி வரைந்தனை கொண்மோ பெருநீர் ‘வலைவர்’ தந்த கொழுமீன் வல்சிப் பறைதடி முதுகுருகு இருக்கும் துறைகெழு தொண்டி அன்னவிவள் நலனே”.


பாடலின் பொருள் :  தலைவனோடு காதல் கொண்ட தலைவி, பறத்தலை கைவிட்டு தம்மை விரைந்து மணம் செய்துகொள்ளுமாறு அவனிடத்தே வற்புறுத்துகிறாள்.  அதற்குச் சான்றாய் ‘கடலுக்குச் சென்று வலையைக் கொண்டு மீன் பிடிக்கும் மக்கள்,  அம்மீன்களை கரைக்கு கொண்டுவந்தவுடன் அதனை வாங்குவதற்கு பலரும் போட்டியிடுவர்’.  
அதுபோல பருவ வயதினளாகிய தம்மை மணம் முடிக்க பலரும் முயன்று வருவதாகவும், அதை உணர்ந்து தம்மை விரைந்து மணக்குமாறும் அவனிடத்தே சொல்லுகின்றாள். இதன் மூலம் ஐங்குறுநூறு இயற்றப்பட்ட காலத்திலேயே வலையர்கள் வாழ்ந்ததும்,  அவர்கள் முத்துகுளித்து மீன்பிடித் தொழிலைச் செய்ததும் தெளிவாக தெரியவருகின்றது.

Valaiyar Warriors community
Fisher/Warrior/Hunter - VALAYAR'S


ஐந்திணை பூர்வகுடி - வலையர்கள் :

               தமிழர்களின் வாழ்வியலை ஐந்திணைகளின் வரையறைக்குள் தான் பெரும்பாலும் குறிப்பிடப்படுகிறது.

குறிஞ்சி  -மலையும் மலை சார்ந்த இடமும்,

முல்லை  - காடும் காடு சார்ந்த இடமும்,

பாலை  - இடைப்பட்ட மணல் நிலப்பகுதி,

மருதம்  - வயலும் வயல் சார்ந்த இடமும் (வேளாண்மை தேசம்),

நெய்தல்  - கடலும் கடல் சார்ந்த இடமும்.

                 இவற்றில் முதுகுடி முத்தரையர் இனக்குழுமமான வலையமார்கள் ஐந்திணைகளையும் தமது பூர்வ வாழ்விடமாக கொண்டிருந்தனர் என்று சங்க காலத்து வரலாறு கூறுகிறது. இம்மக்கள் முக்கிய நான்கு திணை பகுதிகளிலும் பூர்வக்குடி எனும் முதன்மை தமிழ்சமூகமாகவும் திகழ்கின்றனர்.

குறிஞ்சி நிலப்பகுதியில் - ராஜ வேட்டுவர்கள், கண்ணப்ப குல வலையர், பாரி வலையர் மற்றும் வேட்டுவ வலையர் என்றும்,

முல்லை நிலத்தில் - வலையர், ராஜ வலையர், வேட்டுவ வலையர், காவல்காரர், வேட்டைக்காரர் என்றும்,


நெய்தல் நிலப்பகுதியில் - வலையர், மீனவர், மூப்பர், பரதவர், ராஜ பரதவர், ராஜ வலையர், கரையர், தென்னவராயர், திரையர் என்றும்,

மருதம் நிலத்தில் - மூப்பர், மூப்பனார், அம்பலக்காரர், அம்பலம், ஜெமின்தாரர், முத்துராசா, சேர்வை, வலையமார், மூப்பமார், பூசாரி, பாளையக்காரர், தலையாரி, காவல்காரர், மிராசுதார், காவல்மிராசு என்று வேளாண்மையிலும் அரசாட்சியிலும் முதன்மையாக திகழ்ந்தனர்.


இவ்வாறு முக்கிய நான்கு திணைகளிலும் பூர்வக்குடி மக்களாக அடையாளப்பெயர்களை கொண்டிருந்தனர். அதிலும் பெருமளவில் மீன்பிடி மற்றும் வேளாண்மை, அரசாட்சி இவற்றை தமது முதன்மை குலத்தொழிலாகக் கொண்டு வாழ்ந்தனர். 
மேலும் இவர்கள் பல பகுதிகளில்  காவல்காக்கும் வீரனாக, அரசர்மரபு வழிவந்த வேந்தர்களாக தமது எல்லையில் அச்சுறுத்தும் கொடிய மிருகங்களையும், கயவர்களையும் வேட்டையாடி மக்களின் நலன்காக்கும் அரணாகவும் விளங்கினர். இதனை இன்றளவும் விழா எடுத்தும் ராஜ பாரம்பரியமாகவும் கடைப்பிடித்து வருகின்றனர்.

வலையர் பெயர்காரணம் :

Name Meaning of Great Warriors VALAYAR'S ).


         "வலையர் வரலாற்று புகழ்" :-    
 மனிதகுலத்தில் ஆதி (முதுகுடி) -தமிழராய் தோன்றி , பழங்குடி தமிழரின் காவல் வேட்டையில் மக்கள் நலன்காக்கும்  வீரத்தை உலகிற்கு எடுத்துரைத்த முதுஅரசர்களாகவும், தமிழினத்தின் மூத்த தலைமுறை மீனவ வம்சமாக 'முத்துகுளித்தல் , வலை வீசி மீன்பிடித்து வாணிபம் செய்த முதுதமிழ் மக்களே வலையர் (எ) வலைஞர் ஆவார். இம்மக்கள் பல நூற்றாண்டுகளுக்கு முன்பே தொழில் மற்றும் வீரத்தின் அடிப்படையில் வலைஞர், வலையர் எனும் வரலாற்று சிறப்புமிக்க பெயரைக்கொண்டவர்களாக திகழ்கின்றனர்.

வலையர்களே குமரிகண்டம் காலம் முதல் கடல்சார்ந்த பகுதியில் ஆதி மீனவர்களாக (வலைஞர்), பிற பகுதியில் ஆதி வேட்டுவராகவும் தொழில் அடிப்படையில் வரலாற்று சிறப்புடையவர்களாக புகழப்படுகின்றனர்.

போர்களத்தில் வளரி எனப்படும் வலையர்தடி -வலைதடி மற்றும் போர்ஆயுதங்களை கொண்டு எதிரிகளை தன்வசம் வலையாய் வலைத்திழுத்து காவுண்டதால் வீரத்தின் அடையாளமாய் வலையார், வலைஎறியர் (வளரியர்)  என்றும்,
எந்நிலையிலும் அதற்மத்திற்கு வளைந்து கொடுக்காமல் சத்திரிய தர்மம் தவறாது வாழும் அரையர் கூட்டம் என்பதால் "வலையமான் - வலையன்", வலையமார் என்றும் போற்றப்பட்டவர்களே  இந்த "மூத்தகுடி வலையர் மக்கள்."

தமிழின வரலாற்றிலே  2000 ஆண்டுகளுக்கு முன்பே  மூத்த சாதி மக்களாக பட்டம் கொண்டவர்கள் வலையர் மட்டுமே.   " வலையர்- வலையார்- வளையர்- நீதி வலையமான்கள் " என்று  மூத்தகுடி சாதியாக அழைக்கப்பட்ட  ஓரே தமிழ்குடி என்ற பெருமை இவர்களை அன்றி வேறு எவருக்கும் கிடையாது.
 (சான்று : சங்க இலக்கியங்கள்)

சங்ககாலத்திற்கு முன்பே தனிப்பெருமை கொண்ட முதன்மை சாதி வலையர்கள். பல நூற்றாண்டுகளுக்கு முன்பே வலையராக திகழ்ந்தவர்கள்.
வளவன், வளையர், வலையக்காரர், வளரியர், வலையான், வலைஞன் என்பது மறுவி காலப்போக்கில் "வலையன்" என்ற அடையாளத்தோடு வரலாற்று பெயரால் நெஞ்சம் நிமிர்த்தி நிற்கும் தகுதியுடைய ஓரே குடியான மக்கள் "வலையரே" என்ற வீரவரலாற்று பெருமைக்குறியவர்கள்.

 (சான்று : சங்க இலக்கியங்கள், குறிப்புகள் மற்றும் செப்பேடுகள்).

தொழில் அடையாளம்:-

மீன்பிடித்தல் (முத்துகுளித்தல்),

 அரசாளுதல்,

போர்புரிதல்,

வேளாண்மை,

நீதி அதிகாரி, பூசாரி,

ராஜகுல காவல்காரர்,

அரச வேட்டை,

காவல் வேட்டைபுரிதல்.


வலையர் நாடு (தென்சீமை):

     
            பண்டைய வரலாற்றுப்படி வலையர் நாடு எல்லைகளாக  சிவகங்கை, மதுரை, விருதுநகர் மாவட்டங்கள் உள்ளடங்குகிறது. அதிலும் ஏலூர்பத்து நாடு முக்கியமாக குறிப்பிடதக்கது. இந்த நாடு முத்தரையர் இன மக்களின் பழையநாடாகும். இந்த நாடு சிவகங்கை மாவட்டத்தில் பொன்னமாராவதிக்கும், சிங்கம்புணரிக்கும் அருகே அமைந்துள்ளது.

ஏலூர்பத்து நாட்டுக்கு கட்டுப்பட்ட உட்கிராமங்கள்,

1)  மதகுப்பட்டி (தாய் கிராமம்) *கீழதெரு *மேலத்தெரு *சலுகைபுரம்.
2)  ஆழவிளாம்பட்டி.
3)  கோட்டுத்துறைப்பட்டி.
4)  சிலந்தகுடி.
5)  அலைவமுத்துப்பட்டி.
6)  அம்மைச்சிப்பட்டி.
7)  தேத்தாம்பட்டி.
8)  பேரனிப்பட்டி.
9)  வீரப்பட்டி.
10) வலையராதினிப்பட்டி.
11) திருமன்பட்டி.
12) வில்லடிபட்டி.
13) அலங்கம்பட்டி.
14) பிரான்மலை (பறம்புமலை பாரியின் தலைமையிடம்).
15) கொடுங்குன்றம்பட்டி.
16) நீலத்துநல்லூர்
   இவ்வூர்களை உள்ளடங்க கொண்டவையே ஏலூர்பத்து நாடாகும்.  இந்த நாட்டில் முழுக்க முழுக்க முத்தரையர் மக்கள் பெருமளவில் வாழகூடியதும், வலையர் மரபு மக்களின் ஆளுமை ஆட்சி அன்று முதல் இன்றவும் இப்பகுதிகள் முத்தரையர் மக்களில் கட்டுபாட்டிலே உள்ளது என்பது இந்நாட்டின் தனிசிறப்பு.

மேலும் ராமன் வகையாரா, சுப்பன் வகையாரா, கருப்பன், மலையன் வகையரா, நாச்சியார் வகையரா போன்று தம்இன முன்னோர்களின் வகையறா குலவழியினை அடையாளப்படுத்தி இன்றவும் கோவில் வழிபாடுகளை பின்பற்றி வருகின்றனர். பச்சை நாச்சி அம்மன், அழகு நாச்சி அம்மன், பொன்னழகி அம்மன், சப்தமார்கள், பிடாரி, மாரியம்மன் போன்ற பெண் தெய்வங்களையே குலதெய்வமாக வணங்கி வழிப்பட்டு வருகின்றனர்.

முத்தரையர் குல சாமிகள்
முத்தரையர் மக்களின் குலசாமிகள்.

முத்தரையர்குல கடவுள்கள்.


வலையமார் தனிச்சிறப்பு :

              
           வலையர்  எனும் முதுகுடி மக்கள் பண்டைய காலம் முதல் ஆதித்தொழிலாக முத்துகுளித்து மின்பிடித்தல், வளரி ஆயுதம் கண்டு போர்புரிதல், போர்களில் சத்ரியவேட்டை, மிருக வேட்டை போன்றவற்றை வேட்டையாடி தமிழரின் வீரத்தை உலகிற்கு கற்றுதந்தவர்கள். ராஜ வேட்டை பண்பாட்டிலும், காவல் வீரத்திலும் வேட்டையாடுவதை தம்குல காவல்கார தெய்வங்களுக்கு படைத்து வழிபட்டும் வந்துள்ளனர். மேலும் வேட்டையையும், தெய்வ வழிப்பாட்டையும் அடிப்படையாக கொண்டவர்கள் வலையர்கள் என்பதற்கு சான்றாக வலையர் குலத்தில் பிறந்த திண்ணன் என்னும் கண்ணப்ப நாயனார் திகழ்கிறார். "கண்ணப்பகுல வலையர்" என்ற பட்டத்திலும் முத்தரையர்கள் இன்றும் வாழ்கிறார்கள் என்பதும் குறிப்பிடதக்கது.

சிவனுக்கே கண்கொடுத்த வம்சம் என்ற பெருமையும் வலையர் மக்களுக்கே..! ஆயுதம் தரித்து போர்களத்தில் வளரி , வேல்கம்பு எரிந்து வளரியான் என்று காவல்காரனாய் போற்றப்பட்டதும் இந்த வீர வலையர்களே...!

Kannapa Nayanar VALAYAR.
முத்தரையர்- வலையர்குல கடவுள் கண்ணப்ப நாயனார்.

          "வலையர்" குலத்தினர் வேட்டை, தெய்வ வழிபாடு, அரசாட்சி நடத்துவது என அனைத்திலும் திறமை பெற்றவர்களாவார். அதன் அடிப்படையில் இவர்களின் அப்போதைய வீர செயல்களுக்கு ஏற்பவும், இடத்திற்க்கு ஏற்ப  பட்டபெயரிட்டு உலகம் முழுவதும் பரவி கடல் போல வாழ்ந்து வருகின்றனர். "வலையர்" என்ற சாதிய பட்டத்திலேயே தமிழகத்தில் மதுரை, சிவகங்கை, விருதுநகர், தூத்துக்குடி, ராமநாதபுரம், திருநெல்வேலி உட்பட 12 மாவட்டங்களில் பெரும்பாண்மையாக வாழ்ந்து வருகின்றனர் இந்த மன்னர்குல மாணிக்கங்கள்.

பண்டைய காலத்திலே வலையர் குல மன்னர்களில் பரம்பு மலையை தலைமையாக கொண்டு பாரி வள்ளல் மன்னரும்,  கொல்லிமலையை வள்ளல் வல்வில் ஓரி போன்ற  மன்னர்கள் சிறந்த ஆட்சி நடத்தி கொடை வள்ளல்களாக புகழ்பெற்றார்கள்.

மேலும் முத்தரைய வலையர் குலத்தில் பிறந்த கரிகால் சோழன் மரபினராக மக்கள் நலன்காத்து, பிற்கால சோழர்கள்  என புதிய அடையாளத்துடன் ஆட்சி செய்தனர்.
 

கி.பி. 6-ம் நூற்றாண்டுகளில்
முத்தரையர்மூத்த அரையர் என்று அடையாளப்படுதினர்.
அதன் பின் பாளையக்காரராகவும், ஜமீன், மிராஸ், அம்பலகாரர், அம்பலம், மூப்பனார், மூப்பர், சோழ மூப்பர், பஞ்சாயத்து நாட்டார் (நாட்டாண்மை), காவல்காரர், சேர்வை, பூசாரி போன்று வருடங்கள் மாற மாற புதிய புதிய வரலாறுகளையும் படைத்து அதற்கேற்ப பெருமைமிகு பட்ட பெயர்களில் அழைக்கப்பட்டனர்.

" காடையான் குல வலையன் குறிச்சேந்தன் ஆன பெரியநாட்டு முத்தரையன் ". -  (தமிழக வரலாற்று களஞ்சியம்).


Hunter /Fisher Community


தமிழக வரலாற்றில்

வீர வலையர் :

          தமிழரின் தொன்மை ஆயுதம் வளரி எனும் வளை எறியில் வல்லவர்கள் தான் இன்றைய "வலையர்கள்". தமிழின் வரலாறு அழிந்தது போல ஆதி தமிழினம் வலையமார்களையும் ஒடுக்கப்பட்ட நிலையில் ஆக்கிவிட்டார்கள். இது ஏதோ தற்செயலாக நடந்திருக்கும் என்று சொல்வதற்க்கு இல்லை.

மேலும் "கங்கை கொண்டான்" என்று பெருமிதப் படுத்தப்படும் ராஜேந்திர சோழன், கங்கை கரைக்கே செல்லவில்லை...! அவனுக்காக கங்கை வரை பெரும்படை எடுத்து கங்கை நீரை கொண்டு வந்தது முத்தரையர் குலக் கொழுந்து சோழப் பேரரசின் வடப் பகுதி மாதண்ட நாயகர், கண்டோர் நடுங்கும் காலன், பகைவர்களை பதற வைக்கும் பலபீமன் அரையன் ராஜராஜன், அவருடைய பெரும்படைதான் கங்கை வரை சென்று ராஜேந்திர சோழனுக்கு "கங்கை கொண்டான்" என்ற பெயர் வரவும், தஞ்சைக்கு மாற்றாக புதிதாக "சோழர்கள்" நிர்மானித்த "கங்கை கொண்ட சோழப்புரம்" என்ற புதிய தலை நகருக்கு அந்த பெயர் வரவும் காரணமாக இருந்தார்.

அரையன் - ராஜராஜன் முத்தரையனின் போர்படை வீரர்களும் அவர்தம் குடும்பமும், காஞ்சிபுரத்தில் இருந்து "சோழப்பேரரசுக்கு" பாதுகாவல் செய்து அங்கேயே தங்கி இருக்க முடியும் என்பதுதான் இதன் மூலம் நாம் அறியக் கூடிய செய்தியாக இருக்கிறது. நாவலாக இருந்தாலும் நமது பெருமை உலகறிய செய்த வேங்கையின் மைந்தன் நாவல் "அகிலனுக்கு" நாம் கடமைப்பட்டவர்களாகிறோம்.

குறிப்பு : 
இப்பதிவின் பாதி (வளரி வீசிய வீரவலையர்கள், வரலாற்றில் வளரியும் வலையர்களும் ) எனும் தலைப்புகளை நீீீீீக்கி தனி பதிவில் பிரித்து கொடுக்கப்பட்டுள்ளது.
அவற்றை படிக்க Click here...

வரலாற்று சிறப்புமிக்க வலையர்களுக்கு எதிரான வரலாற்று மறைப்புகளும், வாழ்வுரிமை பறிப்புகளும் நடத்தப்பட்டு வலையர் பெருமக்கள் இன்று ஒடுக்கப்பட்ட நிலையில் வாழ்கிறார்கள்.

இதுவும் வரலாற்று அழிப்பு மற்றும் இரட்டிப்பு பணிகளில் ஒன்றுதான். அப்படியானால் தமிழருக்கு எதிரிகள் பல நூற்றாண்டுகளுக்கு பிறகும் தொடர்கிறார்கள் என்பதனை நாம் அறிய வேண்டும். அதனால் நமது பெருமையோ, நமது வீரமோ குறைந்து விடுமா என்ன ? "வலையர்" என்று அழைத்தாலும், ஆதிவேட்டுவர் மட்டும் மீன்பிடி முன்னவர்களாக "வலைச்சாதி" என்று அழைத்தாலும் வரலாற்று புகழ்மிக்க பெயர் காரணம் ஒன்றே.!!

இன்று பிற இனம், பிற சாதியை சார்ந்தவர்களுக்கு "வீர வலையர்" மக்களின் பட்டபெருமை தெரியாமல் இருப்பது எனபது கூட இங்கு பிரச்சனையில்லை, அதே வீரக்குடியில் பிறந்து பிறப்பின் பெருமை அறியாமல் இருக்க முடியுமா ? வளை எறியில் வல்லவர்களான "வலையர் குலத்தவரை" பிற சமூகத்தவர் அறியாமையால் தன் இனஇழிவு மறைக்க அரசகுடி வீரமரபு வலையர்களை பரிகசிக்கும் நோக்கில் (வேறு அர்த்தங்கள் தொனிக்க) "வலையர்" என்று அழைக்கும் போது நாம் நம்முடைய அறியாமையால் துவண்டு போவது சரிதானா ?. 

இனி சில தகுதியற்ற மூடர்கள் வலையர்களை சிறுமை படுத்துவதாக எண்ணி யாரேனும் ஒருமையில் தவறான முறையில் அழைத்தால் நாம் நெஞ்சம் நிமிர்த்தி பெருமிதத்தோடு சொன்னவரை நோக்கி நமது பெயருக்கான காரணத்தைச் சொல்லி, வலையர்களை பெயர் சொல்லி அழைக்கக்கூடாது தகுதியற்ற இழிபிறவிகளை சிறுமைப் படுத்துங்கள்.

வலையர் புகழ் பட்டம்
சருகுமான் வேட்டையில் பெயர்கண்ட வலையர்.


Great VALAIYAR Warriors

"வலையர்" என்ற கர்வத்தோடு..  பல பகுதிகளில் மாற்றார்களை அரவணைத்தும், ஆதிக்க சாதியாகவும் முத்தரையர் என்ற மன்னர்குல தராதரத்தில் ஓங்கி வீரத்துடன் வாழ்கின்றனர் இந்த தமிழ்குடி மக்கள்.

இன்றும் வலையர் என்று கூறுவதில் ஒட்டுமொத்த முத்தரையரும் பெருமையடைகிறோம். என் மூத்தசாதி மக்களை போற்றும் வகையில் "வலையர்- வலைச்சாதி" என்பதில் அம்பலம், அம்பலக்காரர், சேர்வை, சேர்வைகாரர், மூப்பனார், முத்துராஜா, வழுவாடிதேவர், மூப்பர், தலையாரி, தனஞ்சயராயர்  மற்றும் ஒட்டுமொத்த முத்தரையர்களும் பெருமைகொள்கிறோம்...!!
       

வாழ்க வீர வலையரின்

சரித்திர புகழ்..!



நன்றி :
தமிழக வரலாற்று துறை, முத்தரையர் வரலாற்று புத்தகங்கள் மற்றும் பொன்னியின் செல்வன் - 'வேங்கையின் மைந்தன்' நாவல்.


வளரி - Valarie
வலையர் உருவாக்கி பயன்படுத்திய பண்டைய ஆயுதம் - வளரி (வல்லயம்).


Ambalakkarar caste
பலநூறு ஆண்டுகளுக்கு முன்பே முத்தரையர்கள் பல பட்டம் பூண்டது.