Advertisement

திருமங்கையாழ்வார் வரலாறு / Thirumangai Alwar History

முத்தரையர் குல மன்னர்
நீலன் (எ) திருமங்கை
ஆழ்வார்.

Thirumangai alwar
Thirumangai alwar Mutharaiyar


திருமங்கை ஆழ்வார்
: 

                         

  
திருமங்கையாழ்வார்  சோழ நாட்டில் திருவாலி திருநகிரிக்கு மிக அருகிலே உள்ள திருக்குறையலூரில் பிறந்தார். சோழ முத்தரையர் மன்னர்கள் மற்றும் பரமேசுவரன், நந்திவர்மன் போன்ற பல்லவ மன்னர்களைப் பற்றிய குறிப்புகள் இவர் பாடல்களில் இருப்பதால் இவரை எட்டாம் நூற்றாண்டின் பிற்பகுதியைச் சேர்ந்தவர் என்று வரலாறுகூற்று எடுத்துரைக்கிறது.





ஆழ்வாரின் பிறப்பு : 



                 நள வருஷத்தில் கார்த்திகை மாதம் பௌர்ணமியும் கார்த்திகை நட்சத்திரமும் சேர்ந்த தினத்தில் அவதரித்தவர். இவர் அரசகுல மரபினரான முத்தரையர் வம்சவழியில் பிறந்ததாக குறிப்புகள் உள்ளன. 
கல்வெட்டு : (முத்துராஜகுல திருமங்கை ஆழ்வார்).

   இவருக்கு பெற்றோர் இட்ட பெயர் நீலன். இளம் வயதிலே போர்த் திறமைகளுடன் விளங்கினார். தந்தைக்குப் பின் தமது சோழ முத்தரையர் மரபு மன்னனின் சேனாதிபதியாக அமர்ந்து பல போர்களில் வெற்றி பெற்று பரகாலன் (எதிரிகளின் எமன்) என்ற பெயர் பெற்றார். இவருடைய வீரத்துக்குப் பரிசாக முத்தரைய சோழ மன்னன் இவரைத் திருமங்கை நாடு என்னும் குறுநிலத்திற்கு அரசனாக முடி சூட்டினார்.

ஆழ்வார்களிலேயே மிகவும் சிறப்புடையவர் திருமங்கை மன்னன். ஆழ்வார் பாடல்கள் நம் ஆலயங்களின் பழமையை நிரூபிக்கும் சரித்திரச் சான்றுகளாக உள்ளன.



திருமங்கை மன்னரும்

(வைணவ) காதலும் :

       குமுதவல்லி எனும் மங்கை மீது கொண்ட காதலினால் வைணவம் அனுசரிக்க ஆரம்பித்தவர், அவளின் விருப்பத்தின்படி திருமால் அடியார்களுக்கு தினமும் அன்னம் இடுவதையும், திருக்கோயில் கைங்கரியங்களில் ஈடுபடுவதையும் செய்துவரலானார். காலப்பொழுதில் தன்னை முழுமையாக இதில் ஈடுபடுத்திக் கொண்டு தன் செல்வங்களையும், அரசு செல்வங்களையும் முழுக்க இழந்தவரானார்.

இறைப்பணி கடமையை நிறைவேற்ற யாசகமும் கைக்கொடுக்காதப்படியால் களவாடியாவது அடியார்களுக்கு தினமும் அன்னம் இடுவதையும், திருவரங்கத் திருக்கோயிலின் கைங்கரியங்களையும் செய்ய எண்ணினார். இதனால் திருடன் (கள்வன்-கள்ளன்) வேடம்தரித்து செல்வந்தரிடம் கள்ளனாக சென்று செல்வங்களை  களவாடினார். இச்செயலை மெச்சி, இறைவனே இவர் களவாடும் பாதையில் வந்து, இவரை ஆட்கொண்டதோடு வேண்டிய செல்வங்களையும் கொடுத்தருளினார்.


திருமங்கை ஆழ்வாரின் 

வாழ்க்கை வரலாறு :


     திருமாலின் சார்ங்கம் என்ற வில் - அம்சமாக பிறந்தவர். அரசகுடி மன்னனாகப் பிறந்து பக்தி மார்க்கத்தில் திளைத்தவர். பெற்றோர்கள் இவருக்கு நீலன் என்று பெயரிட்டனர். இவரது வீரத்தில் மகிழ்ந்த சோழ மன்னன், நீலனை தன் படைத்தளபதி ஆக்கியதுடன், தம் மரபு என்பதால் திருவாலி நாட்டின் மன்னனாகவும் ஆக்கினான். அமங்கலை என்ற தேலோக கன்னி, கபில முனிவரின் சாபத்தால் பூமியில் குமுதவல்லி நாச்சியார் என்ற பெயரில் வளர்ந்து வந்தாள். இவளது புகழையும், அறிவையும் கேள்விப்பட்ட திருமங்கைஆழ்வார் இவளைத்திருமணம் செய்ய விரும்பினார். 

விஷ்ணுவின் பக்தையான குமுதவல்லியோ தன்னை திருமணம் செய்ய வேண்டுமானால் தினமும் ஆயிரத்தெட்டு வைணவர்களுக்கு அமுது படைக்க வேண்டும் என்ற நிபந்தனை விதித்தாள். நிபந்தனையின் பேரில் அமுது படைத்து, படைத்து அரண்மனையின் நிதி நிலை சரிந்தது. பேரரசின் வழக்கமாக  கப்பம் கேட்டு வந்த ஏவலர்களிடம் தன் நிலையை கூறி அனுப்பி விட்டார். அவமதித்ததாக எண்ணி கோபமடைந்த முத்தரையச்சோழ மன்னன் அமைச்சர்களுடன் தன் படையை அனுப்பி ஆழ்வாரை பிடித்து வரும்படி கூறினான். 

ஆனால் அனைவரும் திருமங்கை மன்னரான நீலனால் விரட்டியடிக்கப்பட்டனர். எனவே மேலும் தமது ஆழ்வாரின் வீரத்தை பரிசோதிக்க எண்ணி சோழ மன்னனே பெரும் படையுடன் சென்றான். ஆனாலும் ஆழ்வார் அவர்களுக்கு எதிராக வாள்ஏந்தி நின்றார். ஆழ்வாரின் வீரத்தில் மகிழ்ந்த சோழநாட்டு சக்ரவர்த்தி அவரிடம் நேரில் சென்று பேச்சுப்படி கப்பம் கட்டுவதே சிறந்தது. அதுவரை அரசமரபு வாக்கு தவறியதால் என் கைதியாக கோயிலில் தங்கியிரு என்றார். 

சோழ மன்னன் கூறியபடி ஆழ்வாரும் மூன்றுநாட்கள் எதுவும் சாப்பிடாமல் கோயிலில் தங்கியிருந்தார். பசி மயக்கத்தில் தூங்கிய ஆழ்வாரின் கனவில் தோன்றிய காஞ்சிபுரத்து பெருமாள். தன் சேவைக்கு வந்தால் அவரது கடன் தீர்க்கும் வகையில் பொருளுதவி செய்வதாக கூறினார். தமது சோழ மன்னனின் அனுமதிபெற்று படையினருடன் காஞ்சிபுரம் சென்ற ஆழ்வார், பெருமாள் கூறிய இடத்தில் தோண்டவும், பெரும் புதையல் இருந்தது. அதை எடுத்து மக்கள் நலனுக்கான சோழ பேரரசுக்குரிய கடனை அடைத்து விட்டு மீதியை அமுது படைக்க வைத்துக்கொண்டார்.
இதையறிந்த சோழ மன்னன் ஆழ்வாரைப் பணிந்து, பணத்தை திருப்பிக்கொடுத்து அமுது படைக்கவைத்துக் கொள்ள கூறினார். இந்தப்பணமும் தீர்ந்து போகவே, ஆழ்வார் தன் அமைச்சர்களுடன் பணக்காரர்களிடம் கொள்ளையடித்து அமுதுபடைத்து வந்தார். ஒரு முறை நாராயணன் லட்சுமி தேவியுடன் மணக்கோலத்தில் வந்தார். 

ஆழ்வார் தன் படையினருடன் அவர்களை மிரட்டி அவர்களது நகைகளை பெற்றுக்கொண்டார். ஆனால் தன் கால் விரல் மோதிரத்தை மட்டும் நாராயணன் கழட்டவில்லை. ஆழ்வாரும் மோதிரத்தை கழட்டும்படி கூறியதற்கு, என்னால் முடியவில்லை முடிந்தால் நீயே கழட்டிக்கொள் என்றார் நாராயணன். அதேபோல் ஆழ்வாரும் குனிந்து தன் பற்களால் விரலைக்கடித்து மோதிரத்தை இழுத்தார். அப்போது நாராயணன் ஆழ்வாரின் காதுகளில் நாராயண மந்திரத்தை உபதேசித்தார்.
வந்திருப்பது நாராயணன் என்பதை அறிந்த ஆழ்வார் மண்டியிட்டு பெருமாிடம் சரணடைந்தார். 

மன்னன் ஆழ்வார் அவரது இறைப்பணி மற்றும் எந்நிலையிலும் கைவிடாத பக்தியும் எம்பெருமானின் மனதையும் வருடிய கள்வனாக நீங்கா புகழுடன் நிலைத்து போற்றப்படுகிறார்.

இறைப்பணியில் சிறந்த மன்னர் :

    பெருமாளின் 108 திருப்பதிகளில் திருமங்கை ஆழ்வார் தனியாக சென்று 46 கோயில்களையும், மற்ற ஆழ்வார்களுடன் சேர்ந்து 36 கோயில்களையும் என மொத்தம் 82 கோயில்களை மங்களாசாசனம் செய்துள்ளார். 12 ஆழ்வார்களில் இவர்தான் அதிக பெருமாள் திருத்தலங்களை மங்களாசாசனம் செய்துள்ளவர் என்பது குறிப்பிடத்தக்கது. இவரது வரலாற்றில் ஒரு சிறப்பு என்னவென்றால் இவர் மொத்தம் 82 பெருமாள் கோயில்களை மங்களாசாசனம் செய்திருந்தாலும், தான் பிறந்த சொந்த ஊரான திருக்குறையலூரில் உள்ள பெருமாள் கோயிலை மங்களாசாசனம் செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

திருமங்கை ஆழ்வார் தனியாக சென்று மங்களாசாசனம் செய்த கோயில்கள்-46. 

1. திருப்புல்லாணி (அருள்மிகு கல்யாண ஜகன்னாதர் திருக்கோயில், திருப்புல்லாணி, ராமநாதபுரம்)
2. திருமயம் (அருள்மிகு சத்திய மூர்த்தி பெருமாள் திருக்கோயில், திருமயம், புதுக்கோட்டை)
3. திருக்கரம்பனூர் (அருள்மிகு புரு÷ஷாத்தமன் திருக்கோயில், உத்தமர் கோயில், திருச்சி)
4. கண்டியூர் (அருள்மிகு ஹரசாப விமோசனர் திருக்கோயில், கண்டியூர், தஞ்சாவூர்)
5. நைமிசாரண்யம் (அருள்மிகு தேவராஜர் திருக்கோயில், நைமிசாரண்யம், உ.பி.)
6. ஜோதிஷ்மட், திருப்பிரிதி(அருள்மிகு பரமபுருஷர் திருக்கோயில், நந்தப்பிரயாக், உ.பி.)
7. சிங்கவேள்குன்றம் (அருள்மிகு பிரகலாத வரதன்,நரசிம்மர் திருக்கோயில், அகோபிலம், கர்நூல், ஆந்திரா)
8. திருஎவ்வுள் (அருள்மிகு வீரராகவ பெருமாள் திருக்கோயில், திருவள்ளூர்)
9. தின்னனூர் (அருள்மிகு பக்தவத்சல பெருமாள் திருக்கோயில், திருநின்றவூர், திருவள்ளூர் மாவட்டம்)
10. திருத்தண்கா (அருள்மிகு விளக்கொளி பெருமாள் திருக்கோயில், காஞ்சிபுரம்)
11. திருப்பரமேஸ்வர விண்ணகரம் (அருள்மிகு பரமபதநாதன் திருக்கோயில், திருப்பரமேஸ்வர விண்ணகரம், காஞ்சிபுரம்)
12. திருப்பவள வண்ணம் (அருள்மிகு பவள வண்ணர் திருக்கோயில், திருப்பவள வண்ணம், காஞ்சிபுரம்)
13. திரு நீரகம் (அருள்மிகு உலகளந்த பெருமாள் திருக்கோயில்) காஞ்சிபுரம்
14. திரு காரகம் (அருள்மிகு உலகளந்த பெருமாள் திருக்கோயில்) காஞ்சிபுரம்
15. திருக்கார் வானம் (அருள்மிகு உலகளந்த பெருமாள் திருக்கோயில்) காஞ்சிபுரம்
16. திருக்கள்வனூர் (அருள்மிகு ஆதிவராக பெருமாள், கள்வப்பெருமாள் திருக்கோயில்கள், திருக்கள்வனூர், காமாட்சி அம்மன் கோயிலுக்குள் உள்ள சன்னதி, காஞ்சிபுரம்)
17. நிலாத்திங்கள் துண்டான் (அருள்மிகு சந்திர சூடப் பெருமாள் திருக்கோயில், நிலாத்திங்கள் துண்டான், ஏகாம்பரேஸ்வரர் கோயிலுக்குள் உள்ள சன்னதி, காஞ்சிபுரம்)
18. திருப்புட்குழி (அருள்மிகு விஜய ராகவப் பெருமாள் திருக்கோயில், திருப்புட்குழி, காஞ்சிபுரம்)
19. திருவஹீந்தபுரம் (அருள்மிகு தெய்வநாயகன் திருக்கோயில், திருவகிந்திபுரம், கடலூர்)
20. காழிச்சீராம விண்ணகரம் (அருள்மிகு திரிவிக்ரமன் திருக்கோயில், சீர்காழி, நாகப்பட்டினம்)
21. திருக்காவளம்பாடி (அருள்மிகு கோபாலகிருஷ்ணன் திருக்கோயில், திருக்காவளம்பாடி, திருநாங்கூர், நாகப்பட்டினம்)
22. திருவெள்ளக்குளம் (அருள்மிகு ஸ்ரீ நிவாசன் திருக்கோயில், திருவெள்ளக்குளம், திருநாங்கூர், நாகப்பட்டினம்)
23. கீழைச்சாலை (அருள்மிகு தெய்வநாயகன் திருக்கோயில், திருத்தேவனார் தோகை, திருநாங்கூர், நாகப்பட்டினம்)
24. திருப்பார்த்தன் பள்ளி (அருள்மிகு தாமரையாள் கேள்வன் திருக்கோயில், திருப்பார்த்தன் பள்ளி, திருநாங்கூர், நாகப்பட்டினம்)
25. திருமணிக்கூடம் (அருள்மிகு வரதராஜ பெருமாள் திருக்கோயில், திருமணிக்கூடம், திருநாங்கூர், நாகப்பட்டினம்)
26. மணிமாடக் கோயில் (அருள்மிகு நாராயணன் திருக்கோயில், மணிமாடக் கோயில், திரு நாங்கூர், நாகப்பட்டினம்)
27. அரியமேய விண்ணகரம் (அருள்மிகு குடமாடு கூத்தன் திருக்கோயில், அரியமேய விண்ணகரம், திரு நாங்கூர், நாகப்பட்டினம்)
28. வன் புருத்÷ஷாத்தமம் (அருள்மிகு புருத்÷ஷாத்தமன் திருக்கோயில், வன் புருத்÷ஷாத்தமம், திரு நாங்கூர், நாகப்பட்டினம்
29. திருத்தேற்றி அம்பலம் (அருள்மிகு செங்கண்மால் திருக்கோயில், திருத்தேற்றி அம்பலம், திரு நாங்கூர், நாகப்பட்டினம்)
30. வைகுந்த விண்ணகரம் (அருள்மிகு வைகுண்டநாதன் திருக்கோயில், வைகுந்த விண்ணகரம், திரு நாங்கூர், நாகப்பட்டினம்
31. செம்பொன் சேய் கோயில், (அருள்மிகு பேரருளாளன் திருக்கோயில், செம்பொன்சேய் கோயில், திரு நாங்கூர், நாகப்பட்டினம்)
32. தலைசிங்க நான்மதியம் (அருள்மிகு நாண்மதியப் பெருமாள் திருக்கோயில், தலைச்சங்காடு, நாகப்பட்டினம்)
33. இந்தளூர் (அருள்மிகு பரிமள ரங்கநாதர் திருக்கோயில், திருஇந்தளூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம்)
34. தேரழுந்தூர் (அருள்மிகு தேவதிராஜன் திருக்கோயில், தேரழுந்தூர், நாகப்பட்டினம்)
35. திருச்சிறுபுலியூர் (அருள்மிகு அருள் மாகடல் திருக்கோயில், திருச்சிறுபுலியூர், திருவாரூர்)
36. நாகை (அருள்மிகு நீலமேகப் பெருமாள் திருக்கோயில், நாகபட்டினம்)
37. திருக்கண்ணங்குடி (அருள்மிகு லேகநாதப் பெருமாள் திருக்கோயில், திருக்கண்ணங்குடி, திருவாரூர்)
38. திருக்கண்ண மங்கை (அருள்மிகு பக்தவத்ஸலப் பெருமாள் திருக்கோயில், திருக்கண்ண மங்கை, திருவாரூர்)
39. திருச்சேறை (அருள்மிகு சாரநாதன் திருக்கோயில், திருச்சேறை, தஞ்சாவூர்)
40. திருநறையூர் (அருள்மிகு திருநறையூர் நம்பி திருக்கோயில், திருநறையூர், தஞ்சாவூர்)
41. திருவெள்ளியங்குடி (அருள்மிகு கோலவல்வில்லி ராமன் திருக்கோயில், திருவெள்ளியங்குடி, தஞ்சாவூர்)
42. நந்திபுர விண்ணகரம் (அருள்மிகு ஜகந்நாதன் திருக்கோயில், நந்திபுர விண்ணகரம், நாதன் கோயில், தஞ்சாவூர்)
43. ஆதனூர் (அருள்மிகு ஆண்டளக்கும் ஐயன் திருக்கோயில், ஆதனூர், தஞ்சாவூர்)
44. திருப்புள்ளபூதங்குடி (அருள்மிகு வல்வில் ராமன் திருக்கோயில், திருப்புள்ளபூதங்குடி, தஞ்சாவூர்)
45. திருக்கூடலூர் (அருள்மிகு வையம் காத்த பெருமாள் திருக்கோயில், திருக்கூடலூர், தஞ்சாவூர்)
46. திருக்கோழி (அருள்மிகு அளகிய மணவாளர் திருக்கோயில், உறையூர், திருச்சி.



திருமங்கை ஆழ்வார் அருளியவை :

1.பெரிய திருமொழி (1084 பாசுரங்கள்)
2.திருக்குறுந்தாண்டகம் (20 பாசுரங்கள்)
3.திருநெடுந்தாண்டகம் (30 பாசுரங்கள்)
4.திரு எழு கூற்றிருக்கை ( 47 பாசுரம்)
5.சிறிய திருமடல் (155 பாசுரங்கள்)
6.பெரிய திருமடல் (297 பாசுரங்கள்).

   எனும் ஆறு திவ்வியப் பிரபந்தங்களில் 1351 பாசுரங்கள் அருளியுள்ளார். இவற்றுள் பல யாப்பு வடிவங்களைப் பயன்படுத்தி உள்ளார்.

ஆழ்வாரின் தனி சிறப்புகள் :

♦ பல்வேறு யாப்பு வடிவங்களைப் பக்தி இலக்கியத்திற்குப் 
பயன்படுத்திக் கொண்டார்.

♦ நாட்டுப்புறப்பாடல் வகைகளைப் பின்பற்றி, பக்தி 
நெறியைப் புலப்படுத்தினார்.

♦ சித்திரகவி படைத்துப் பக்தி உலகுக்கு வளம் சேர்த்தார்.

♦ தாண்டகங்கள் அருளி அவற்றுள்ளும் நாயகநாயகி 
பாவத்தை அருளினார்.

♦ அகப்பொருள் துறையைப் பயன்படுத்திக் கொண்ட 
ஆழ்வார் நாயகி நிலையில் இருந்து பாடியிருப்பவை 
பக்தியின் முதிர்கனிகள் ஆகும்.

♦ மடல் துறைவழி ஓர் புதிய இலக்கிய வகையைப் படைத்த 
பெருமைக்கு உரியவர்.

♦ பக்தி இலக்கியத்தை, பக்தி இயக்க இலக்கியம் ஆக்கி, 
தமிழ் வளத்துக்கும் இலக்கிய வகைப் பெருக்கத்திற்கும் 
வித்திட்டவர்.

♦ இறைவன் கோயிலில் எழுந்தருளி இருக்கும் தோற்றத்தில் 
(அர்ச்சாவதாரம்) ஈடுபாடு கொண்டு ஏராளமான 
பாசுரங்களைப் பக்திச் சுவை ததும்பப் பாடிய பெருமைக்கு உரியவர்.


தினம் ஒரு பாசுரம் - 59. 


ஓதி ஆயிர நாமங்கள் உணர்ந்தவர்க்கு* உறுதுயரடையாமல்*
ஏதமின்றி நின்றருளும் நம்பெருந்தகை* இருந்த நல் இமயத்து*
தாது மல்கிய பிண்டி விண்டு அலர்கின்ற* தழல்புரை எழில் நோக்கி*
பேதை வண்டுகள் எரியென வெருவரு* பிரிதி சென்றடை நெஞ்சே
பெரிய திருமொழி. 
(திருமங்கை ஆழ்வார்).



திருமங்கை ஆழ்வாரும் - அவதரித்த முத்தரையர் மரபும் :

           

       ஆழ்வார்களில் தனித்தோர் சிறப்புமிக்க திருமங்கை ஆழ்வார் திருச்சி ஸ்ரீரங்கம் கோயில் திருப்பணி முடித்து முத்தரசன் குறடு என்று ஆயிரங்கால் மண்டபம் எடுப்பித்து வரலாற்று புகழ்போற்றினார். இன்றும் திருமங்கை ஆழ்வார் வம்ச வழி முத்தரையர் மக்கள் தம்குல அரையர் சேவை (ராஜ) வழிபாடும்,  வேறுபரி நிகழ்வும் வருடந்தோறும் சிறப்பாக நடத்தி வருகின்றனர்.

பெருமளவில் முத்தரையர்கள் கண்ணப்பர் வழி சிவ கோத்திரம் வழிபாடும், திருமங்கை ஆழ்வார் மரபில் விஷ்ணு பெருமாள் கோத்திரம் என்று இருவேறுபட்ட வழிபாட்டினை கொண்டுள்ள அரசகுடி மக்கள் என்பது நமது பெருமைக்குறிய ஒன்றாகும்.






முத்தரையர் மரபு மன்னர்கள் பல சிவவழிபாடு தளங்களை கட்டினாலும், திருச்சி ஸ்ரீரங்கம் கோயில் திருப்பணி, புதுகை - திருமயம் பெருமாள் கோயில் மூலம் வைணவத்தையும் ஆதரித்தும் வழிபட்டும் தளங்களை அமைத்துள்ளனர் என்பது சிறப்புக்குறியது.

திருமங்கை ஆழ்வார் முத்தரையரே என்பதற்கான ஆதாரம்.

1. ஸ்ரீரங்கத்தில்  திருமங்கை ஆழ்வார் அவர்கள் ஆயிரங்கால் மண்டபத்தை கட்டி அதற்கு அவர் பிறந்த முத்தரையர் இனத்தின் பெயரால்  *முத்தரசன்குறடு* என்றே பெயர் வைத்தார் முத்துராஜகுல திருமங்கை ஆழ்வார்.

2. மேலும் ஸ்ரீரங்கம் வேடுபரி திருவிழாவில் திருமங்கை ஆழ்வார் முத்தரையர்  வழிவந்த திரு.பெரியண்ணன் முத்தரையர் அவர்களுக்கும், அவரது குடும்பத்தினருக்கும் அறங்காவல்துறையால்  ஆண்டுதோறும் சிறப்பு மரியாதை  செய்யப்படுகிறதே தவிர, வேறு எந்த இனத்தாருக்கும் செய்யப்படவில்லை.

3. இதேபோல் திருமங்கையாழ்வார் பிறந்த ஊரான திருவாலி நாட்டில்,  தற்போதைய நாகை மாவட்டம்  வேதராஜபுரத்தில்  கருடசேவை நிகழ்ச்சியின் போது திருநகரிலிருந்து அவர் பிறந்த திருநாங்கூருக்கு கொண்டுவந்து  தங்க வைத்து தீர்த்தவாரி நடைபெருகிறது.

4. பழங்காலம் தொட்டு இன்றுவரை திருமணங்கொல்லை எனும் கிராமத்தில் பங்குனி மாதம் வேடுபரி விழா நடத்தப்படுகிறது.  இவ்விழாவில் முத்தரையர்களுக்கு பரிவட்டம் கட்டி கோவில் மரியாதை செய்யும் வழக்கம் உள்ளது. இந்த விழாவில் திருமங்கை ஆழ்வாரை தூக்கி செல்லும் உரிமை முத்தரையர்களுக்கு மட்டுமே என்பது குலமரபுச் சான்றாக உள்ளது.

5. இதேபோல காஞ்சி வரதராஜ பெருமாள்கோவிலில் வேடுபரி நிகழ்ச்சி நடைபெருகிறது.  இவ்விழா தொன்று தொட்டு இன்றுவரை வைகாசி மாதம் நடைபெறுகிறது. இங்கேயும் முத்தரையர்களுக்கு பரிவட்டம் கட்டி கோவில் மரியாதை செய்யப்படுகிறது.

6. இந்நிகழ்ச்சியின் போது நான்கு நாட்களில் 30 கி.மீ தூரம் வரை, திருமங்கை ஆழ்வாரைத் தூக்கி சென்று சேர்ப்பதை முத்தரையர்கள் மட்டுமே முழு உரிமையுடன் செய்கின்றனர்.

இங்கு தங்களால் கட்டப்பட்ட மண்டபத்திற்க்கு "ஸ்ரீதிருமங்கை மன்னனவதரித்த முத்துராஜ குல பாளையக்காரர் மண்டபம் "  என கல்வெட்டி பெயர் பொறித்துள்ளனர்.
இந்நடைமுறைகளின் மூலம் திருமங்கை ஆழ்வார் "முத்தரையர்" என உறுதியாகிறது.

ஆண்டுதோறும் நடைபெறும் இந்த விழாவில் ஏராளமான முத்தரையர்கள் கலந்து கொள்கின்றனர்.
இங்கே முத்தரையர் மண்டகப்படி அன்று வேடுபரி நிகழ்ச்சியை நடத்துகின்றனர். 








    நன்றி : திரு.இரா.திருமலை நம்பி சேர்வை. 
"தமிழக வரலாற்றில் முத்தரையர்" நூல் ஆசிரியர். 

அகில இந்திய திருமங்கை முத்தரையர் மன்னர் பேரவை,
 
தமிழக தொல்லியியல் வரலாற்று பாதுகாப்பகம்.








வாழ்க மூத்தஅரசகுடி முத்தரையர் வம்சம்.