Advertisement

மாமன்னர் தனஞ்சய முத்தரையர் சிலைஉருவம் வெளியீட்டு விழா / King Thananjaya Mutharaiyar Statue Image

தனஞ்சய முத்தரையர் (சோழ மகாராசா)

 
             தமிழ்குடி மக்களின் பெருமைகளை தாங்கி நிற்கும் தலைச்சிறந்த வரலாற்று சின்னமாக விளங்குவது தஞ்சாவூர் நகரமாகும். இன்று மாவட்டமாக உள்ள தஞ்சை பகுதி ஆன்மீக தளங்கள் மற்றும் கட்டடக்கலைகளின் பல வரலாற்று புகழுக்குறிய ஓர் நினைவுச்சின்னமாகும்.

உலக நாடுகள் அனைத்தும் வியந்து பார்க்கும் தஞ்சாவூரை உருவாக்கி, சீரமைத்து தலைநகராக்கி ஆண்ட தனித்துவ வரலாறு முத்தரையர் மன்னர்களுக்கே உரியது. கி.பி. 7 நூற்றாண்டில் மாமன்னர் தனஞ்சய முத்தரையர் எனும் மன்னரே வரலாறுமிக்க தஞ்சாவூரை அழகிய நகரமாக உருவாக்கியுள்ளார். இம்மன்னரது மரபுவழியில் கி.பி. 8 நூற்றாண்டில் பேரரசர் பெரும்பிடுகு (எ) சுவரன்மாறன் முத்தரையர் தஞ்சை பகுதியை சீரமைத்து, ஆட்சிப்பகுதியின் தலைமை இடமாகவும் உருவாக்கியுள்ளார்.. இதனால் இப்பேரரசர் தஞ்சைக்கோன் என்றும் வரலாற்றில் கூறப்பட்டுள்ளார். ஆனால் நாம் பலரும் அறிந்த வரலாற்றை இதுவரை பெரியளவில் எதிலும் மிகைப்படுத்தி கூறப்படுவதில்லை என்பது சிறப்புமிக்க தமிழினத்தின் வரலாறுகளை அழிப்பது போன்றதாகும்.

இத்தகைய புகழ்மிக்க வரலாற்றை சிறப்பிக்கும் வகையில் தஞ்சையை உருவாக்கிய மாமன்னர் தனஞ்சய முத்தரையருக்கென திருவுருவமும், சிலைவடிவமும் வரலாற்று அடிப்படையில் சிங்கத்தமிழர்களால் கொடுக்கப்பட்டுள்ளது. பெருமைமிகு தமிழ் மன்னர்களின் வரலாற்றை எடுத்துரைத்து அழியா நினைவு சின்னங்களாக அடையாளப்படுத்திட மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்தி, காலம்காலமாக அடுத்த தலைமுறைகளிடம் கொண்டுசெல்வது உலகத்தமிழர்களாகிய நம் அனைவரின் முதற்கடமையாகும்.


தஞ்சையை உருவாக்கிய மாமன்னர் தனஞ்சய முத்தரையர்.

தஞ்சையை தலைநகராக்கி ஆண்ட பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர்.


 மாமன்னர் தனஞ்சய முத்தரையர் திருவுருவம் வெளியீடு

(King Thananjaya Mutharaiyar Statue Image).

             வரலாற்று போற்றுதலுக்குறிய முத்தரையர் வம்ச மன்னரான தஞ்சாவூரை உருவாக்கிய தனஞ்சய முத்தரையருக்கு திருவுருவம் கொடுக்க முதல் முயற்ச்சியில் மதுரை மற்றும் சுற்றுவட்டார தமிழக முத்தரையர்களின் உணர்வினால் அரியணையில் அமர்ந்த திருவுருவம் கொடுக்கப்பட்டது.
இதற்கு உறுதுணையாக நின்ற வலையமான் மகேஷ்ராயர், இளங்கோ அதிராயருக்கும் நன்றிகள் பல...!!

மாமன்னர் தனஞ்சய முத்தரையரின் அரியணை தோற்றம்.

அரசகுடி வரலாற்றில் ஓர் சரித்திர முயற்ச்சி⚔🤝💪🤝




மாமன்னரின் சிலைவடிவ திருவுருவம் வெளியீடு (Release of Thananjaya Mutharaiyar Statue Image).

               15/09/2019 அன்று ஆவணி 29 ம் நன்நாளில் பெரும்பிடுகு முத்தரையர் மாவட்டம் திருச்சியில் பேரரசர் பெரும்பிடுகு வெண்கல சிலை முன்பு மாமன்னர் தனஞ்சய முத்தரையரின் சிலை திருஉருவம் ஒட்டுமொத்த முத்தரையர்களின் ஒத்துழைப்போடு மிக கம்பீரமான தோற்றம் வெளியிடப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் திருச்சி, தஞ்சை, திருவாரூர், விருதுநகர், மதுரை, திண்டுக்கல், நாமக்கல் மாவட்ட உறவுகள் கலந்துகொண்டு விழா சிறப்பாக முடிந்தது.

15/09/2019 மதியம் சரியாக 12.45 மணியளவில் தனஞ்சய முத்தரையரின் சிலைவடிவம் வெளியீடு நிகழ்ச்சி அரங்கேறியது.

இளைஞர்களின்  ஒற்றுமையில் இந்நாளில் பிறந்தநாள் கொண்டாடிய நாமக்கல் விஜய் முத்தரையருக்கு மாமன்னரின் வரைபடம் பரிசாக அளிக்கப்பட்டது.


ராஜகுல முத்தரையர்களின் வரலாறு போற்றும் இம்முயற்ச்சிக்கு நிதி உதவியில் முன்னின்ற முத்தரையர்கள்:

ஆலை ராஜ்குமார் முத்தரையர்,
மன்னை சுரேஸ் அம்பலகாரர்,
சேலம் தனபால் வேட்டுவகவுண்டர்,
மதுரை சாலைராஜன் முத்தரையர்,
திருச்சி தண்டபானி பட்டயத்தார்,
மதுரை ராம்குமார் முத்தரையர்,
முத்துப்பேட்டை முத்துகுமார் அம்பலம்,
கரையங்காடு ஆனந்தன் அம்பலகாரர்,
மன்னை ஞானசேகரன் அம்பலம்,
மதுரை வீரா அம்பலம்,
மதுரை அலங்கை கார்த்திராயர்,
மேலூர் அழகர் அம்பலம்,
திருவாரூர் வீரா சேர்வைகாரர்,
தஞ்சை அசோக் முத்தரையர்,
தஞ்சை முருகதாஸ் அம்பலக்காரர்,
தஞ்சை தீனா முத்தரையர்,
தஞ்சை ராஜா முத்தரையர்.
புதுகை கலை அம்பலத்தார்,
திருச்சி காளிதாசன் முத்துராஜா,
தஞ்சாவூர் முத்து அம்பலம்,
மற்றும் மதுரை (மூப்பர், மூப்பனார், வலையமார்),  திருமங்கலம், கல்லுப்பட்டி போராளிகளுக்கும் நன்றி...!


சிறந்த வரைபடமாக மாமன்னருக்கு உயிரான உருவம் கொடுத்த தெய்வா ஆர்ட்ஸ் -மதுரை  அவர்களுக்கு நன்றி....! நன்றி..!

வரலாறு ஒப்புமை தழுவி மாமன்னரின் சிலைவடிவ மாதிரி வரைபடம் வரைந்து கொடுத்த தஞ்சை நாட்டார் தீனா முத்தரையர் அவர்களுக்கு நன்றி.! நன்றி..!

முயற்ச்சியில் எந்நிலையிலும் உறுதுணையாக நின்ற விருதுநகர் மாரிமுத்து மூப்பர்(வளரியர்),
தஞ்சை கரிகாலன் முத்தரையர்,
மற்றும் அனைத்து தமிழக முத்தரையர் உறவுகளுக்கும் நன்றி... நன்றி...!

வெளியீட்டு விழாவில் துணைநின்ற திருச்சி முத்தரையர்களுக்கும் நன்றி....!

கல்லணை அன்பு மற்றும் பேரரசர் சிலை பாதுகாப்பு காவல்துறைக்கும் தனிபட்ட நன்றிகள்...!

இதற்கும் மேலாக என்றும் *நம்பிக்கைக்கும், சாதிக்காக ஒத்துழைத்த அனைவருக்கும் நன்றி...!*
Thanks for all... Thanks to all Mutharaiyar's.

ஒன்றுபடுவோம்... அரசகுடி வரலாற்றை வென்றெடுப்போம்..🤝🤝🤝💪💪🙏🙏🙏⚔🦁🇪🇸🦁🇭🇺🦁🇧🇴⚔

வாழ்க தமிழ்மொழி...!
வளர்க தமிழினம்.....!!
ஓங்குக தமிழின புகழ்...!!