Advertisement

முத்தரையர் பெயர் காரணம் / Meaning Of MUTHARAIYAR.

முத்தரையர் அரசமரபு


Great King Perumbidu MUTHARAIYAR
Great KING Perumbidugu MUTHARAIYAR - SUWARAN MARAN.

           தமிழகத்தில்  3 கோடி மக்களாக பெரும்பாண்மையாக வாழ்ந்து வரும் இவர்கள் மூத்தகுடி அரச பரம்பரை சமூகத்தவர். இவர்கள் இந்தியாவில் தமிழகம்,கேரளா,ஆந்திரா,கர்நாடகா மற்றும் வட மாநிலம் என 7 மாநிலங்களிலும், இந்தியா - இலங்கை - மலேசியா என மூன்று நாடுகளிலும் பரவலாக வாழும் ஓர் முதுகுடி அரச தலைமுறை மக்கள் ஆவர்.

முத்தரையர் குடிமக்கள் குமரிகண்டத்தில் தோன்றி ஆதிகுடி தமிழனாய் சிந்து சமவெளிகளை சீர்படுத்தி, தமிழனின் முதல் தொழிலாக வலை வீசி முத்துகுளித்து மீன்பிடித்து, தமது வீரத்தின் வெளிப்பாடாய் வேட்டையாடி தமிழ் கலாச்சாராத்தை தோற்று வித்து வாழ்ந்துவந்தனர். வீரத்தை உலகிற்கு கற்றுத்தந்தனர். 

இவர்கள் ஆதி மீனவ சமூகமாக திரைகளை (கடல்) தன்வசப்படுத்தி முக்கடல் எனும் இந்திய பெருங்கடல், அரபிக்கடல் மற்றும் வங்கக் கடல்களில் வாணிக செல்வந்தர்களாகவும், முத்துக்குளிக்கும் மீனவர்களாகவும் சங்க காலத்திற்கு முன்பே சிறந்து விளங்கினர். இவ்வாறு தமிழர்களுக்கு முன்னோடியாய் பெருமைமிகுந்த வேந்தர்களாக திகழ்ந்ததால் முத்திரை ஆண்ட முதுகுடி முத்திரையர்களாகவும் போற்றப்பட்டனர்.

பின்னர், நாடாள தலைபட்டு " அரையர் " என்ற தூய தமிழ்சொல்லால் 'அரசர்கள்' என அழைக்கப்பட்டனர். ஒரே இனமாக நிலபரப்பை பல எல்லைகளாக பிரித்து நாடாண்டு, கலை வளர்த்து, தமிழ் வளர்த்து, மக்களை நல்வழிபடுத்தி சிறப்புற ஆண்ட இம்மக்கள் மூத்த அரசகுடி தலைமுறை என்பதால்,

மூத்த +அரையர் - முத்தரையர்.

முதி +அரையர் - முத்திரியர் (முத்திரையர்).

முது +திரையர் - முத்திரையர் (முத்தரையர்).

மூன்றுதரை + அரசர் = முத்தரையர்.

(சேர, சோழ, பாண்டிய எல்லையான மூன்றுதரைகளையும் ஆட்சிபுரிந்த  அரையர்கள் (அரசர்கள்) என்றும் பொருள்கொண்டு முத்தரையர்கள் போற்றப்பட்டனர்).

(அரசாட்சியில் முதுகுடி அரசர்களாக முத்திரை பதித்து சிறந்த பொற்கால ஆட்சியமைத்ததால் இவ்வாறு பெயருடன் புகழ்ந்து போற்றப்பட்டார்கள்).


 முத்திரியர் =  முத்திரை +அரையர் - முத்திரையர்.


முத்திரியர்கள் = முதி +அரையர் - முதிராயர், முத்திராயர்.

முத்திரி - முதன்மை அரசாளும் மக்கள் எனவும் பொருள்கொண்டு அழைக்கப்பட்டனர்.

               இவ்வாறு புகழ்மிக்க காரணப்பெயர்களில் சங்ககால இலக்கியங்களும், புலவர் பெருமக்களாலும் போற்றப்பட்டு " முத்தரையர் " என்ற புகழ்ப்பெயர் கொண்டு ஆட்சிப்புரிந்தனர். மூத்த அரசகுடி அரையர் மக்களாக அழைக்கப்ட்டாலும் 'முத்தரையர்' என்பது பிற மக்களுக்கும் உரிய பட்டம் ஆகாது. ஓர் இனத்தின் வம்சவழி அடையாளப்பெயரே என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், பண்டைய காலத்தில் முப்பெரும் நிலப்பகுதியான,
கடல் - நிலம் - மலை பகுதிகளில் மீனவ அரையராகவும், வேட்டுவ அரையர்களாகவும் முத்தரையர் மரபினரே சிறந்த ஆட்சிபுரிந்துள்ளனர்.  இதன் அடிப்படையிலும் 'மூன்றுநிலப்பகுதி ஆண்ட அரையர்களாக முத்தரையர்கள் தனிச்சிறப்புடன் போற்றப்படுகின்றனர்'.

பேரரசுகளாக சீறும் சிறப்புமாக பல தேசங்களை தம் நாடுகளாக கொண்டு பல நூற்றாண்டுகளாக ஆண்டுவந்த மூத்த அரசகுடி மரபு (அரையர்) மக்களே "முத்தரையர்கள்"  ஆவர்.  இவர்கள் இன்றும் நாடாண்ட மன்னர்களின் வாரிசுகள் நாம் என்ற கர்வம் இல்லாமல் தமிழகத்தில் பிற மக்களோடும் எளிமையாக வாழ்ந்துகொண்டிருக்கின்றனர். 

தமிழகத்தில் இம்மக்கள் மட்டுமே  "முத்தரையர்" என்ற தம் சாதிய, இன பெயரிலே இன்றும் அரசகுடி மக்கள் என்று தெளிவுபடுத்தும் ஓர் மன்னர் வம்சம் என்ற பெருமைக்கு உரியவர்கள் என்பது மறுக்க முடியா உண்மை.

இதுவே " முத்தரையர் ( MUTHARAIYAR ) " வம்சத்தின் பெயர்காரணம்.

Mutharaiyar
பேரரசர் சுவரா முத்தரையர்

முது அரசகுடி (அரையர்) :

       ஆதி தமிழனாய் பிறந்து முதுகுடி அரசதலைமுறையாய் தலைத்தெடுத்து'
சிந்துவெளி பகுதிகளில் சமநிலையாக்கி முதல் அரச தலைமுறையாக தளர்ந்தெழுந்த சமூகம்தான் முத்தரையர் சமூகம் என்கிறார்கள் வரலாற்று ஆய்வாளர்கள்.

முத்துராஜா :

            முதுராஜா என்ற பெயர் காலப்போக்கில் முத்துராஜா என்று வரலாற்று ஆசிரியர்கள் குறிப்பிடுகின்றனர். முத்தரசர், முத்தரையர், முத்துராஜா என்பது இனத்தின் மரபு பெயராகவும் விளங்குகிறது.

முத்துராஜா -முதுகுடி அரச பரம்பரையினர், மன்னர் வம்சாவளியினர் என்றும் முத்தரையர் மக்ககளை அடையாளப்படுத்துகின்றனர்

முத்தரையர்குல பேரரசர் இரண்டாம் பெரும்பிடுகு முத்தரையர்.
(சுவரன் மாறன்)