Advertisement

பேரரசர் முத்தரையர் வரலாறு / Great Emperor Mutharaiyar History

பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர்.

(The Short History Of Emperor Perumbidugu Mutharaiyar).

             
                         சூரிய குல சத்திரியர் வம்சமாக போற்றப்படும் முத்தரையர் இனத்தின் குலதெய்வ கடவுள்களில் ஒருவராக போற்றப்படுவர் பெரும்பாட்டன் பேரரசர் சுவரன்மாறன் முத்தரையர் (எ) இரண்டாம் பெரும்பிடுகு முத்தரையர் ஆவார்.

     முதுதமிழுக்கு மெய்கீர்த்தி கண்ட பேரரசர் பெரும்பிடுகு முத்தரையருக்கு வருடந்தோரும் தமிழக அரசு சார்பாக அரசுவிழாவாகவும், அரசகுல முத்தரையர் வம்சத்தினரால் குலதெய்வ திருவிழாவாகவும் பேரரசரின் சதயவிழா திருநாள் கொண்டாடப்படுகிறது.

தமிழக வரலாற்றில் ஏனைய பல மன்னர்கள் குறிப்பிடப்பட்டாலும் அனைத்திலும் சிறந்த விளங்கிய மாமன்னர்கள் இருவருக்கே சதயவிழா என்பது கொண்டாடப்படுகிறது.

அதன்படி வரலாற்றில் முதன்மையானவராகவும்,
14 நூற்றாண்டுக்கு முன்பு கி.பி. 7 ஆம் நூற்றாண்டில் தமிழுக்கு மெய்க்கீர்த்தி கண்டு, 16 பெரும் போர்களில் வென்று, ஒட்டுமொத்த தமிழக எல்லையில் பொற்கால ஆட்சி நிலைநாட்டி  பேரரசராக விளங்கிய பெரும்பிடுகு சுவரன்மாறன் முத்தரையரும்,
கி.பி.10 ஆம் நூற்றாண்டில் சோழதேசங்களை விரிவுபடுத்தி சிறப்புற ஆண்ட மாமன்னர் ராஜ ராஜ சோழன் என்பாரும் ஆவர்.



பேரரசர் சதயவிழா :

         தமிழகத்தில் இந்து மதத்தின் கூற்றுப்படி சதய நட்சத்திரத்தில் பிறந்த அரசர்கள் பல பெருமைமிகு வரலாற்றிலும், அரசாட்சிலும் சிறந்த மாமன்னர்களாக போற்றப்படுவார்கள் என்று கூறப்படுகிறது. 
ஆனால் முத்தரையர் மன்னர்கள் ஆன்மீகத்தில் நெறியுடன் சமய, மத வேறுபாடு பாராதவர்கள் என்பது வரலாறு போற்றும் முத்தரையர்களது தனிச்சிறப்பு.




சதயவிழா பெயர்காரணம் :


          ஓர் நூற்றாண்டு என்பது  100 வருடம் (ஆண்டுகள்).

ஓர் சதயம் = 10 நூற்றாண்டு (1000 வருடம்).

வரலாறு அடிப்படையில் 14 நூற்றாண்டுகளுக்கு முன்னர் அரசாட்சி புரிந்த பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் சதயத்தை கடந்து மக்கள் மனதில் வாழும் ஓர் மாமன்னர் ஆவார். ஆகையால் பலநூற்றாண்டை கடந்து இன்றும் போற்றப்படும் பேரரசர் பெரும்பிடுகு முத்தரையரின் புகழ்ப்போற்றி வழிபடும் விழாவே
மே 23- சதய விழா.

மேலும், பேரரசர் இரண்டாம் பெரும்பிடுகு  சுவரன்மாறன் முத்தரையர் ஆன்மீக அடிப்படையில் சதய நட்சதிரத்தில் 23-05-675 (கி.பி.7)-ல் பிறந்தவராகவும் வரலாற்று அறிஞர்கள் கூறுகின்றனர்.

அரசமரபு முத்தரையர் வம்சாவளியினர் மீண்டும் பேரரசர் தம்மினத்தில் பிறந்ததை நினைத்து பூஜித்து வழிபடும் தினமே பேரரசர் பிறந்தநாள் மற்றும் சதய (திரு)விழா எனவும் கொண்டாடி மகிழ்கின்றனர்.

இவற்றின் மைய கருத்துகளின் அடிப்படையிலே முதுகுடி தமிழர்களின் தமிழ்வருட சித்தரை - வைகாசி  கணக்கீட்டிலும், ஆங்கில தினத்தில் வருடமான 
மே -23 அன்று வருடா வருடம் "முத்தரையர் சதயவிழா" நாளாக தமிழக மக்கள் அனைவரும் பேரரசரை கொண்டாடி வருகின்றனர்.
இதுவே வரலாறு அடிப்படையில் பேரரசர் திருநாளுக்கான காரணமாக உள்ளது.

காலம்கடந்தும் பல வரலாற்று பெருமைகளுடன் சதயவிழா கொண்டாட  முதற்தகுதியானவராக திகழ்பவர்
தமிழ் பெருவேந்தன் பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் மட்டுமே.


Emperor Mutharaiyar Image

பேரரசர் வரலாறு 

(சுருக்கம்) :

               பேரரசர் முத்தரையரின் இயற்பெயர் சுவரன்மாறன் முத்தரையர்.
இவரின் புனைப்பெயர் இரண்டாம் பெரும்பிடுகு முத்தரையர். இம்மன்னரின் ஆட்சிக்காலம் கி.பி.705-745.
பேரரசரின் ஆட்சிக்காலம் "தமிழகத்தின் சிறந்த பொற்காலம்" என்று வரலாற்றில் போற்றப்படுகிறது.

பேரரசர் போர்வெற்றிகள்:

  பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் தனது ஆட்சிக்காலத்தில் சந்தித்த மொத்த போர்களின் எண்ணிக்கை 16. இவற்றுள் தன்னிச்சையாக பேரரசர் வென்றது 14 போர்கள், பல்லவர்களுக்கு உதவியாக 2 போர்களும் ஆகும்.

1.  வஞ்சிப்போர்,
2.  புகழிப்போர்,
3.  காந்தளூர் போர்,
4.  அழிந்தியூர் போர்,
5.  கண்ணணூர் போர்,
6.  செம்பொன்மாறி போர்,
7.  திங்களூர் போர்,
8.  கொடும்பாளூர் போர்,
9.  காரையூர் போர்,
10. மணலூர் போர்,
11. மறங்கூர் போர்,
12. அண்ணல்வாயில் போர்,
13. வெண்டகோடல் போர்,
14. கோனாட்டு (நெற்போர்),
15. மணிப்பாறை போர்,
16. மாமங்கை போர்.


தனது ஆட்சியில் தன்னிச்சையாக 14 மாபெரும் போர்களில் தொடர்ந்து வெற்றிமட்டுமே கண்ட மாமன்னராகவும், தன் ஆட்சிக்காலத்தில் தமிழ் வெண்பாக்களினால் முதுதமிழுக்கு மெய்க்கீர்த்தி கண்ட வரலாறும் பேரரசர் பெரும்பிடுகு முத்தரையரின் தனிச்சிறப்புகள்.

பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் மன்னர் சந்தித்த போர்கள் அனைத்தும் சித்திரை, வைகாசி மாதத்தில் என்றும் வரலாற்று ஆசிரியர்கள் கூறுகின்றனர்.  கி.பி எட்டாம் நூற்றான்டில் (705-745) ஒட்டுமொத்த தமிழகத்தினையும் வென்று பெரும் பேரரசாக தனது நாட்டை உருவாக்கிய முதல் மாமன்னர் "சுவரன்மாறன்- இரண்டாம் பெரும்பிடுகு முத்தரையர்" என்ற பேரரசர் மட்டுமே என்று வரலாறு கூறுகிறது.

வஞ்சிபூ மற்றும் வாகைபூ சூட தகுதியானவர்கள் அரசர்கள் மட்டுமே.
போருக்கு செல்லும் முன்பு வஞ்சி பூவையும்
போரில் வெற்றி பெற்ற பின்னர் வாகைபூவையும்  சூடுவர். எல்லா மன்னர்களும் போருக்கு செல்லும்போது வஞ்சிப்பூவும் வெற்றி பெற்றால் வாகைப்பூவை சூடுவதும் வழக்கம். 

 ஆனால்,  நமது பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் போருக்கு செல்லும்போதே வாகைப் பூவை சூடிக்கொண்டு வெற்றி என்றும் நமதே என செல்வாராம். இத்தகைய கர்வமிகு மாவீரனாக திகழ்ந்தவர் பேரரசர் என்று வரலாறு கூறுகிறது. அதன்படி பேரரசர் முத்தரையர் தன்னிச்சையாக சந்தித்த 14 போர்களிலும் தொடர் வெற்றி கண்ட ஒரே பேரரசர் என்ற பெருமை இவருக்கே சேரும். இம்மாமன்னரின் சிறப்பு பட்டமான பெரும்பிடுகு என்றால் பேரிடி என்பது பொருள்.

வரலாற்றில் தன் வாழ்நாளில் வாகைபூவை மட்டுமே சூடிய ஒரே பேரரசர் நம் முப்பாட்டன் -  சுவரன்மாறன் பெரும்பிடுகு முத்தரையர் மட்டுமே ஆவார்.

வரலாற்றில் வாகைபூவின் அடையாளமாக திகழ்ந்த நம் முத்தரையர்குல மாமன்னரின் வரலாறுப்புகழ் போற்றி  வருடாவருடம் வைகாசி மாதம் (மே-23) ல் "பேரரசர் முத்தரையரின் சதயவிழா" உலகமுழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது.



பேரரசர் சுவரன்மாறன்

 முத்தரையர் தனிச்சிறப்புகள்.

           சூரியகுல சத்திரிய வம்சத்தில் தனி சரித்திரம் படைத்த சத்ரு கேசரி, சத்ரு மாமல்லன் (மாவீரன்)- நமது பேரரசர்.

♦  தன் வாழ்நாள் 16 பெரும் போர்களில் தோல்வியே காணாத மாபெரும் அதிதீரன் பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் மட்டுமே. 14 போர்களை தன்னிச்சையாகவும் வென்றவர். இரண்டு போர்களில் பல்லவர்களுக்கு துணையாக நின்று வெற்றியை கண்டவர் நமது சிம்ம நாயகன் -பேரரசர் முத்தரையர்.

♦  எதிலும் எவருக்கும் நிகரில்லா மாவீரன் -நமது தமிழ் பேரரசர்.

♦  தமிழுக்கு முதல்மெய்கீர்த்தி கண்ட தமிழ்வேந்தன் -நமது பேரரசரே ஆவார். கன்னித்தமிழில் 24 வெண்பாக்களாக கல்வெட்டில் தமிழினை சிறப்பித்தவர்.

♦  வஞ்சிப் பூ சூடிய மன்னர்களில் வெற்றி வாகைப்பூவை சூடிய பெருமை நம் பேரரசருக்கு மட்டுமே..

♦  வாள் ஏந்தும் வம்சத்தில் பேரரசர் சுவரன்மாறன் அவர் ஏந்திய போர்வாள்- பிற்கால  அரசர்கள் எவராலும் தூக்ககூட முடியா வரலாறை கொண்டவர் நமது முத்தரையர் வாள்மாறன் மட்டுமே..

♦  வாளே ஏந்திய வாள்மாறன் என்று போற்றப்பட்டவர் பேரரசர் சுவரன் மாறன் முத்தரையர் ஆவார்.

♦  வாள் ஏந்த ஆசைபடும் அரசர்களில் அந்தவாளே தழுவ ஆசைப்படும் கை -பேரரசர் பெரும்பிடுகு கரங்களே.

♦  பேரிடி வீரனாய் எதிரிகளை  சிதைத்தெறிந்த வரலாறு கூறப்படுவது -பெரும்பிடுகு பேரரசரை மட்டுமே.

♦  சூரியகுல சத்திரிய வம்சத்தின் நிகரில்லா சூரியன் -பேரரசர் சுவரன்மாறன்.

♦  மூத்தகுடி முத்தரையர் வம்ச வீரமுப்பாட்டனே பேரரசர் முத்தரையர்.
வங்ககடலாய் தன் ஆட்சியை தமிழகம் முழுவதும் அமைத்த மாமன்னர் -நம் பேரரசரே.

♦  சதயம் கடந்து இன்றும் வாழும் தமிழர்களின் பேரரசர் பெரும்பிடுகு  முத்தரையர் மட்டுமே..

♦  சிவனுக்கு கண்கொடுத்து, பசுவிற்கு நீதி சொன்ன முதுகுடி சத்திரிய வம்சத்தின் சரித்திர நாயகன் -சீர்மாறன் (எ) பேரரசர்.

♦  தனிசிறப்பு கொண்ட தன்மான சிங்க தமிழரின்  நற்புகழாளன் பேரரசர் அவர்கள்.

♦  சூரியனை நெற்றியில் வைத்து, சிங்கத்தை குணத்தில் வைத்து மக்கள் நலனை மனதில் வைத்து ஆண்ட சத்திரியரே -நம் பேரரசர் இரண்டாம் பெரும்பிடுகு மன்னர்.

♦  தஞ்சையின் வேந்தர் "தஞ்சைக்கோன்"  என்று போற்றப்பட்டவரே நமது பேரரசர் முத்தரையர்.

தமிழ் முப்பாட்டன் பேரரசர் இரண்டாம் பெரும்பிடுகு சுவரன்மாறன் முத்தரையர் புகழ் ஓங்கட்டும்.

பேரரசரின் வாரிசு மன்னர்களாய் நெஞ்சம் நிமிர்த்தி நின்றால்- எமனும் அஞ்சி எம்காலடியில் தஞ்சம்புகும் வீர வரலாறு படைத்த இனமே ராஜ "முத்தரையர் வம்சம்"..!


பேரரசர் புகழ்போற்றுவோம் :


சங்ககால சாதியில் உதித்த சரித்திர நாயகன்.

முத்தரையர் அரச குலத்தின் முத்திரை பதித்த பெருவேந்தன்.

போரில் தோல்விகண்ட மன்னர்களுள் வெற்றி மட்டுமே செருக்குடன் கண்ட பெரும்பிடுகு பெருவேந்தன்.

16 பெரும்போர்களில் வெற்றிமட்டுமே கண்ட ஒரே *பேரரசன்*.

தஞ்சை நகரை தலைநகராக்கிய *தஞ்சை நற்புகழாளன்*.

முத்தமிழுக்கு மெய்கீர்த்தி கண்ட முதல் மாமன்னர்.

வல்லத்தில் வானளவு கோட்டை கட்டிய *வல்லக்கோன்.*

தஞ்சையையும், வல்லத்தையும் வரலாற்றில் பதித்த *தஞ்சைக்கோன்*.

வான்மாறனாய் விண்ணுலக புகழ்கொண்டு வாகைப்பூ மட்டுமே சூடும் *வாகைவேந்தன்*.

போர்வாள் கட்டித்தழுவும் கைகளை உடைய வீரமிக்க *வாள்மாறன்.*

படைகள் பல கொண்டு போர்கள் பல வென்ற சிங்கவம்சத்தின் பெரும்பாட்டன்.

எதிரிகளை நடுநடுங்க வைத்த *பேரிடி வேந்தன்*.

சத்ருக்களை (எதிரி) வீரத்தால் சிதரி ஓடவைத்த *சத்ருகேசரி*.

கயவர்களின் சூழ்ச்சிகளை முறியடித்து கள்வனுக்கு கள்வராக எதிரிகளை வென்று மண்டியிட வைத்த *கள்வர் கள்வன்*.

*மக்கள் மனதை கவர்ந்த கள்வன்*.. பிரபஞ்சை மனதில் இறைவனாக இடம்பிடித்த அரசன்.

வலையர்குல பெருமை தாங்கி பெரும்படைகளை தன்வசம்கொண்டு தமிழகம் முழுவதும் வெற்றிகொடி நாட்டிய *மறப்படை மீனவன்*.

பலதேச மன்னர்கள் குன்றுகளில், காடுகளில் ஓடி ஒழிய, கழுகுகளும் ஓநாய்களும் பின்தொடர போரில் தன்னிகரில்லா பேரிடி வீரனாய் கர்ஜித்து வெற்றிகள் பலகொண்ட சிங்கத் தமிழனின் புகழ் பாடுவோம்..🙏

 சூரியகுல முத்தரையர் இன சொந்தங்களே..! 
அரச தலைமுறையின் அடையாளத்தையும், தராதரத்தையும், நமது வெளிப்பாடில் காப்போம்..!

குறிப்பு :

     ‌    பேரரசர் திருநாள் மே-23 அன்று பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் பிறந்த நாள் என்று குறிப்பிடும் போதும் கட்டாயம் சதய திருநாள் என்பதை குறிப்பிட மறவாதீர்.

பல்வேறு பெருமைமிகு சிறப்புகளை போற்றி,  தமிழ் பெரும்பாட்டன் பேரரசர் பெரும்பிடுகு முத்தரையரின் முழு வரலாறு படித்து உங்களின் நாளைய சந்ததிகளுக்கு அவசியம் எடுத்துரையுங்கள்.

முது தமிழினமே வாழ்க வாழ்க...!!
ஆதி அரசர் இனமே வாழ்க..!!
முத்தமிழ் முத்தரையர்களே வாழ்க வாழ்க...!!