தனுஷ்கோடி காளி அம்பலம்
சுனாமி பேரழிவிற்கு முன்பு தமிழகத்தில் கொடூர பேரழிவு ஒன்று நடந்தேறியது. அந்த மாபெரும் பேரழிவில் ஓர் நகரமே கடலுக்கும் மூழ்கியது. அச்சம்பவம் இன்றும் அழியா சோகமாக அனைவரது மனதிலும் உள்ளது. வங்கக்கடல் மற்றும் அரபிக்கடல் சீற்றத்தால் 55 ஆண்டுகளுக்கு முன்பு 1964-ஆம் ஆண்டு டிசம்பர் 23க்கும் 24-க்கும் இடைப்பட்ட நள்ளிரவில் ஏற்பட்ட மிகப்பெரிய கடல் சீற்றத்தில் ராமேஸ்வரத்தை அடுத்து தனுஷ்கோடி நகரமே அழிந்தது.
இந்தியாவின் தென்கோடி வரலாற்றிலும், பிரிட்டிஷ் காலத்திலும் வணிக மையமாக விளங்கிய துறைமுக நகரமே தனுஷ்கோடி. 1964 டிசம்பர் 23 ஆம் தேதி வங்கக்கடலில் உருவான கோரப்புயல் நள்ளிரவு 12.30 க்கு ஆழ்ந்த உறக்கத்திலிருந்த பல்லாயிரக் கணக்கானோர் உயிரை பறித்தது. மறுநாள் அதிகாலை வரை நீடித்த 120 கி.மீ. வேகத்தில் வீசிய புயலால் கடல்நீர் பெரும் அலைகளாக ஊருக்குள் புகுந்து தனுஷ்கோடியை அடியோடு அழித்தது.
பாம்பன் பாலம் தனுஷ்கோடி நகரத்துடன் இணைத்திருந்த காலத்தில் சென்னையில் இருந்து தனுஷ்கோடிக்கு ரயிலில் சுற்றுலா வந்த கல்லூரி மாணவ, மாணவிகள் உட்பட பயணிகள் அனைவரும் ரயில் பெட்டிகளில் சிக்கி உருத்தெரியாமல் அழிந்தனர். கடலோரத்தில் இருந்த ஆயிரக்கணக்கான மீனவர்களின் குடும்ப வாழ்விடமும் அழிந்து போயின.
கிருஸ்தவ தேவாலயம் |
கோயில்களிலும், கட்டடங்களிலும், ரயில்நிலையத்திலும், எஞ்சியவர்களை நீச்சல்காளி அம்பலம் அவர்களின் சீறிய முயற்ச்சியால் பலர் காப்பாற்றப்பட்டனர். அவருடன் சில வலையர் - மீனவர்களும் நாட்டுப் படகில் பலரை மீட்டு பாதுகாப்பான இடத்திற்கு அழைத்து சென்றனர். உயிரிழந்த பலரது உடல்களையும் நீச்சல்காளி நீண்டநேரம் போராடி மீட்டார்.
தனுஷ்கோடி நகரம் அழிந்த பின்னும் அங்கு வரும் மக்களிடம் அந்நகரின் வரலாற்றை எடுத்துக்கூறி தனுஷ்கோடியை வாழவைத்தார் நீச்சல் காளி என்கிற காளி அம்பலம்.
தனுஷ்கோடி நகரம் அழிந்த பின்னும் அங்கு வரும் மக்களிடம் அந்நகரின் வரலாற்றை எடுத்துக்கூறி தனுஷ்கோடியை வாழவைத்தார் நீச்சல் காளி என்கிற காளி அம்பலம்.
இரயில் நிலையம் |
அஞ்சல் அலுவலகம் -1955 |
தனுஷ்கோடியின் மைந்தன் "நீச்சல் காளி அம்பலம்".
இந்தியாவின் தென்பகுதி எல்லை முடிவில் தனுஷ்கோடியில் பிறந்தவர் நீச்சல் காளி அம்பலம் அவர்கள். இவர் முன்னை தமிழருள் மூத்தவர்கள் என்றழைக்கப்படும் வலையர் எனும் மீனவர்குடியில் பிறந்தவர். வலையர்கள் என்பார் அரசகுடியும், மீனவருமான முத்தரையர் சமூகத்தினர் ஆவர். கடல் தேவதையின் கருணையைப் பெற்றவர் இந்த காளி அம்பலம். இவர் இளம் வயதிலேயே நீச்சலில் அதீத திறமை வாய்ந்தவராக திகழ்ந்தவர். இந்த காளியின் கடலாட்சி, தமிழகத்தின் தென் கிழக்குக் கோடியில் உள்ள தனுஷ்கோடியில் மிக பிரசித்தமானது. மீனவரான காளி அம்பலம் அவர்கள், 60 மற்றும் 70-களில் தனுஷ்கோடி முதல் இலங்கை வரை நான்கு முறை பாக் ஜலசந்தி வழியாக கடலை நீந்திக் கடந்து சாதனைபடைத்தவர்.
"நீச்சல் காளி அம்பலம், 1968-ல் ஒருமுறை பாக் ஜலசந்தியை நீந்திக் கடக்கும் போட்டியில் தங்கப் பதக்கம் வென்றார். ராமேஸ்வரம் நகரியம் சார்பில் இந்தபோட்டி நடத்தப்பட்டது.
நீச்சல் காளி தனுஷ்கோடியிலிருந்து ஸ்ரீலங்காவின் (இலங்கை) தலைமன்னார் வரை – 40 கி.மீ தூரம் – வெகு அனாயாசமாக நீந்திக்கடந்துக்கொண்டிருந்தவர் அவர். தனுஷ்கோடியில் குதித்து, 12 இலிருந்து 14 மணி நேரம் இடைவிடாமல் நீந்தி தலைமன்னார் சேர்ந்து, அங்கு இரண்டு மூன்று நாட்கள் இருந்துவிட்டு, மறுபடியும் நீந்தி தனுஷ்கோடி வந்து சேருவாராம். இங்கே கவனிக்க வேண்டிய விஷயம் ஒன்று உண்டு. சமீபத்தில் கூட ப்யூலா செளத்ரி என்ற நீச்சல் வீராங்கனை தனுஷ்கோடியிலிருந்து தலைமன்னார் வரை நீந்தியிருக்கின்றார். ஜிப்ரால்டர் ஜலசந்தியைக் கூட நீந்திக் கடந்தவர் இந்த ப்யூலா.
ஆனால் இதுபோன்ற நீச்சல் வீரர்களுக்கும், நீச்சல் காளிக்கும் முக்கியமான ஒரு வித்தியாசம் உள்ளது. நீச்சல் வீரர்களோடு கூடவே பாதுகாப்புக்காக விசைப்படகுகளில் ஆட்கள் செல்வார்கள். மின்விளக்கு வசதி, வழிகாட்டுவதற்கு ‘கைட்’ போன்ற எல்லா வசதியும் உண்டும். அதோடு, தண்ணீரிலேயே நீண்டநேரம் இருப்பதால் உடம்பில் சுளுக்கு, பிடிப்பு எதுவும் ஏற்பட்டுவிடாமல் இருக்க உடம்பு பூராவும் ‘க்ரீம்’ தடவிக்கொள்வார்கள் நீச்சல் வீரர்கள்.
இது எல்லாவற்றையும் விட அவர்களுக்குள்ள அதிமுக்கிய வசதி என்னவென்றால், நீந்தமுடியவில்லையென்றால் நீச்சலை ரத்து செய்துவிட்டு படகில் ஏறி அமரலாம். ஆனால் நீச்சல் காளிக்கு இதுபோன்ற வசதிகள் ஏதும் கிடையாது. களைப்பு ஏற்பட்டாலும் நீச்சலை நிறுத்த முடியாது, நிறுத்தினால் மரணம். மூச்சைப் பிடித்துக்கொண்டு தலைமன்னார் வரை நீந்தியே ஆக வேண்டும். இவற்றையெல்லாம் சிறிதும் பொருட்படுத்தாது ஒற்றை ஆளாக 40 கி.மீ கடல் தூரத்தை 14 மணி நேரம் தொடர்ச்சியாக நீந்தி சாதனை படைத்தவர். தனது 80 வயதிலும் முதுமை எண்ணாது ஆழ்கடலில் பாய்ந்து நீந்தக்கூடிய நெஞ்சுரம் கொண்டவர். இதனால் அப்பகுதிகளில் தனித்தோர் மரியாதையுடன் நீச்சல்காளி அழியா புகழ்ப்பெற்றார்.
நீச்சல்காளி அம்பலத்திற்கு இளம் வயதிலேயே பெருமைமிகு அடையாளம் கிடைக்கப்பெற்றது. 1964-ல் ஏற்பட்ட புயலில் கடலுக்குள் சிக்கிய தனுஷ்கோடி நகரத்தின் மக்களை மீட்டு நீச்சல் காளி' மட்டும் தனியொரு ஆளாக பல உயிர்களைக் காப்பாற்றி இருக்கிறார். தனது நீச்சல் திறனை பெரிதும் பல உயிர்களை காப்பாற்ற பயன்படுத்தினார். தன்னுயிரையும் பொருட்படுத்தாது வெகுநேரம் கடலில் நீந்தியும், உடல் அயர்வு பாராமலும் மக்கள் பலரை காப்பாற்றியது நீச்சல் காளியின் தனி போற்றுதலுக்கு உரியது.
அந்த கடல்சீற்றத்திற்கு பிறகு அங்குவாழ்ந்த மக்கள் அனைவரும் இராமேஸ்வரம் மற்றும் பிற பகுதிகளில் குடிஅமர்த்தப்பட்டனர். ஆனால் அந்நகரில் மிகுந்த செல்வந்தர்களாய் வாழ்ந்த முத்தரையர் சமூக வலையர்கள் தமது வீடுகள் மற்றும் அடிமட்ட வாழ்வாதாரத்தினை இழந்தும் தனுஷ்கோடியை விட்டு வராமலே சிலர் அங்கேயே தங்கியுள்ளர். இன்றும் அம்மக்களின் குடிசைகளும், நீச்கல்காளி அம்பலத்தின் குடும்பத்தினரும் அப்பகுதியில் உள்ளதை சுற்றுலா செல்லும் பயணிகள் அந்த அவலநிலைகளை பார்க்க முடியும்.
தற்போது அப்பகுதியில் இடிந்து போன, சேதமடைந்த சில கட்டிடங்கள் மட்டுமே புயலின் மிச்சங்களாய் தற்போது இங்கு வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு சோகத்தை நினைவூட்டி வருகின்றன. தனுஷ்கோடி நகரம் அழிந்தபின்பும் நீச்சல் காளி அவர்கள் நான் பிறந்து வளர்ந்த இடம், இந்த இடத்தைவிட்டு நான் வரமாட்டேன். என் கடைசி காலம் வரை இங்கேயே இருப்பேன், இன்னும் எத்தனைப் புயல் வந்தாலும் சந்திப்பேன் என்ற வைராக்கியத்துடன் முதன் முதலில் அங்கேயே தங்கி அந்நகரின் நீங்கா நினைவிலே வாழ்ந்து வந்தார். அங்கு வரும் வரவேற்க்கும் முதல் ஆளாக நின்று மக்களிடம் தனுஷ்கோடியின் வரலாறும், அழிவையும் எடுத்துரைத்து மக்களின் மனதில் தனுஷ்கோடி நகரத்தை அழியாது வாழவைத்தார். அதன்பிறகு அவரது குடும்பத்தினரும் அவருடனே அப்பகுதியில் வாழத்தொடங்கினர்.
தனுஷ்கோடி நகரம் தான் இழந்த பெருமையை மீண்டும் பெறும் என்ற நம்பிக்கையுடன் வாழ்ந்து வந்த நீச்சல்காளியின் விருப்பம் கடைசிவரை நிறைவேறவில்லை. அந்த கடல் விழுங்கிய தனுஷ்கோடியின் கடைசி சாட்சியாய் நின்ற நீச்சல்காளியும் தன் மனதில் பதிந்த நீங்கா துயரத்திலேயே உயிர்நீத்தார்.
தனக்கென்ற தனி வரலாறு கொண்ட "மனிதகுல மாணிக்கம் நீச்சல் காளி அம்பலம்" அவர்கள் 2010 ஆம் வருடம் நவம்பர் 03 அன்று இறைவனடி சேர்ந்தார்.
இன்றுவரை யார் இந்த நீச்சல் காளி என்பதும், கிருஸ்தவ ஆலயம், இந்து கோயில்களும் நிறைந்த பெருவணிக நகரமாகவும், அக்காலத்திலேயே பிரமாண்ட அஞ்சல் அலுவலக கட்டிடமும், இரயில்வே நிலையமும் கொண்டிருந்த புனித பூமியான தனுஷ்கோடி நகரினை பற்றியும் பெரியளவில் கூறப்படவில்லை.
"நீச்சல் காளி அம்பலம்" தனுஷ்கோடியின் அடையாளம் ஆவார்.

♦ பெரும்நகரமாக இருந்து அழிந்துள்ள தனுஷ்கோடியின் எல்லை பகுதியில் நினைவு சின்னங்களும், பல உயிர்களை கடலில் நீந்தியே காப்பாற்றிய நீச்சல்காளி அம்பலத்திற்கு திருஉருவ சிலை மற்றும் மண்டபம் அமைத்திட வேண்டும்.
இது அப்பகுதி மக்கள் மட்டுமின்றி அனைவரது நீண்டநாள் வேண்டுகோள்களாகவே உள்ளது. மத்திய, மாநில அரசுகளும் சமூக ஆர்வலர்களும் நினைத்தால் நிச்சயம் இது சாத்தியமாகும்.
(நீச்சல் காளியின் விருப்பமும்-ஏக்கமும் தனுஷ்கோடி நகரம் மீண்டும் மக்களின் வாழ்வு நகரமாக மாற வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது).
(நீச்சல் காளியின் விருப்பமும்-ஏக்கமும் தனுஷ்கோடி நகரம் மீண்டும் மக்களின் வாழ்வு நகரமாக மாற வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது).
Neechal Kaali Ambalam PNG HD image
பட உதவி : மாரிமுத்து மூப்பர் (விருதுநகர்)