Advertisement

தஞ்சாவூர் வரலாறு / Thanjavur History / Founded by Mutharaiyar Dynasty


முத்தரையர்களின் தஞ்சாவூர்

( History of Thanjavur )




             இந்திய திருநாட்டில் அமைந்துள்ள மாநிலங்களில் தொன்மையான தமிழ்நாட்டின் வரலாற்று நினைவிடமாகவும், தமிழர்களின் புகழிடமாகவும் திகழ்வது தஞ்சாவூர் மாவட்டமாகும். காவிரிபாசனத்தில் செழிப்பாக உள்ள இப்பகுதிகள் வேளாண்மை தேசமாகவும், நெற்களஞ்சியமாகவும் குறிப்பிடப்படுகிறது. பல்வேறு தனிச்சிறப்புமிக்க பழங்கால வரலாற்றை கொண்டுள்ள தஞ்சாவூர் மாநகரம் உருவானது எப்படி என்பது நம்மில் பலருக்கும் தெரியாத ஒன்றாகவே உள்ளது.

தஞ்சாவூர் முதன்முதலில் கி.பி. 7 ஆம் நூற்றாண்டில் தான் சிறுநகரமாக உருவாகியுள்ளது.
வல்லம்பகுதியுடன் ஒன்றியிருந்த தஞ்சைநகரை தனியாக ஓர் அழகிய நகரமாக அப்போது அப்பகுதிகளை சிறப்பாக ஆண்டுவந்த முத்தரையர் மன்னர் உருவாக்கினார். தமிழகத்தின் மத்திய சோழமண்டலத்தை முழுவதுமாக முத்தரையர் நாடாக கொண்டு மாபெரும் முத்தரையர் பேரரசு மன்னர்கள் ஆட்சிபுரிந்து வந்துள்ளனர்.

இப்பேரரசின் வழிவந்த முத்தரையர் மன்னர்கள் பல ஆன்மீக தளங்கள், குடைவடை கோயில்கள், நீர்நிலை அணைகள், இசைக் கல்வெட்டுகள், சமயநெறிகள், தாணம், வீரம், பெண்களுக்கு முன்னுரிமை, சமத்துவம் என அனைத்திலும் சிறந்து விளங்கினர். இம்மன்னர்களின் கட்டடக்கலை தொழில்நுட்பமே இன்றளவும் தமிழர்களின் நிகரில்லா வரலாறாக போற்றப்படுகிறது.

தென்னிந்திய வரலாற்றில் தன்னிகரில்லா புகழ்மிக்க இந்த தமிழ் அரசகுடி (அரையர் இனம்) முத்தரையர்களின் வரலாற்று சிறப்புகளில் தஞ்சாவூரை உருவாக்கி, சீரமைத்து தலைநகராக்கி ஆண்ட தனித்துவ பெருமை மாமன்னர் தனஞ்சய முத்தரையருக்கும், பேரரசர் பெரும்பிடுகு சுவரன்மாறனுக்கும் உரிய மேலும் ஓர் வரலாற்று சிறப்பாகும்.

மாமன்னர் தனஞ்சய முத்தரையரால் சிறுநகராக உருவாக்கப்பட்ட தஞ்சை நகரத்தை, இவரது பேரனாகிய கி.பி. 8-ஆம் நூற்றாண்டில் (705-745) வல்லம் பகுதியை தலைமையிடமாக கொண்டு ஆட்சிக்கு வந்த வல்லக்கோன் என்ற பட்டமுடைய தமிழனத்தின் நிகரில்லா பேரரசர் பெரும்பிடுகு சுவரன்மாறன் முத்தரையர் (கி.பி.705-745) தஞ்சாவூரை பெருநகராக சீரமைத்து, முத்தரையர்களின் ஆட்சி தலைநகராகவும் உருவாக்கினார்.

 இதனால் இம்முத்தரையர் பேரரசர் தஞ்சைக்கோன் என்ற பட்டமும் பெற்றார். மேலும் பெரும்பிடுகு சுவரன்மாறன் முத்தரையர் தொடர்ச்சியாக 16 போர்களில் வெற்றிக்கொண்டு முத்தரையர் நாட்டின் எல்லையை தமிழகம் முழுவதும் விரிவுபடுத்தினார் என்பதும் இம்மன்னரது தனிச்சிறப்பாகும். 

இதனாலே மாமன்னர் தனஞ்சய முத்தரையர் மற்றும் பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் எனும் இரு மன்னர்களுமே தஞ்சாவூரை உருவாக்கிய முத்தமிழ் வேந்தர்களாக போற்றப்படுகின்றனர்.

கி.பி.7 மற்றும் கி.பி.8 நூற்றாண்டில் முத்தரையர் மன்னர்களால் உருவாக்கப்பட்ட தஞ்சை நகரம் 240 வருடங்களுக்கு பிறகு ராஜராஜ சோழனால் தஞ்சை பெரியகோயில் கட்டப்பட்டதற்கு பிறகு மேலும் தனிச்சிறப்பை பெற்றது.




தஞ்சாவூர் முதலில் முத்தரையர் பேரரசின் ஆட்சி தலைநகராக இருந்து பிறகு ரே-னாட்டு சோழமுத்தரையர் மரபில் வந்த பிற்கால சோழர்களின் தலைநகராகவும் தொடர்ந்து இருந்துள்ளது. அதன்பிறகு கால அரசியல் மாற்றத்தால் மராட்டியர், நாயக்கர் மன்னர்களும் தஞ்சையை ஆண்டுள்ளனர்.


தஞ்சாவூர் பெயர்காரணம் :


       தஞ்சாவூர் எனும் தஞ்சை நகரமானது கி.பி. 7-ஆம் நூற்றாண்டில் திருச்சி, வல்லம் (தஞ்சை), புதுகை சுற்றிய பகுதிகளை ஆண்ட மாமன்னர் தனஞ்சய முத்தரையரால் உருவாக்கப்பட்டதாகும். இம்மன்னர் தனது ஆட்சிக்காலத்தில் பல ஆன்மீக கட்டுமானங்களையும், நீர்நிலைகளையும், குடைவரைகளையும் ஏற்படுத்தியுள்ளார்.

இத்தகைய மக்கள் நலன்காக்கும் செயல்களிலே அதீத நாட்டமும் கொண்டு சிறப்பான ஆட்சிபுரிந்துள்ளார். இதனால் தன்பாட்டனாராகிய கி.பி.545 காலகட்டத்தில் தென்சோழ நாடுகளை ஆட்சிபுரிந்த தனஞ்சய வர்ம முத்துராசா (எரிகால் சோழ முத்தரையர்) எனும் மன்னரின் பெயரில் ஓர் அழகிய நகரத்தை உருவாக்கிட எண்ணி தனஞ்சாபுரி எனும் சிறுநகரை உருவாக்கினார்.

இந்த தனஞ்சாபுரி நகரமானது காலப்போக்கில் புலவர் மற்றும் பிரஜை பெருமக்களால் தனஞ்சயனூர், தனஞ்சாவூர் என்று அழைக்கப்பட்டு, காலமாற்றத்தில் தஞ்சாவூர் என மறுவி வரலாற்றில் போற்றப்படுகிறது. இதனையே இன்று சுருக்கமாக தஞ்சை எனவும் தமிழகத்தில் மாவட்டமாகவும் குறிப்பிடப்படுகிறது.

வரலாற்றின் அடிப்படையில் தனஞ்சயவர்ம முத்தரையர் எனும் மன்னரின் பெயரில் தஞ்சாவூர் உருவானதும், இந்நகரை தன்பாட்டன் பெயரில் உருவாக்கிய முத்தரையர் மன்னருமே தஞ்சை உருவாகியதற்கு முக்கிய காரணமாக குறிப்பிடப்படுகிறது.

இதுவே தஞ்சாவூர் என்பதற்கு உண்மையான வரலாற்று சிறப்புமிகு பெயர்காரணம் ஆகும்.
உலக நாடுகள் அனைத்தும் பார்த்து வியக்கும் நமது தஞ்சாவூர் உருவாகிய வரலாற்றையும், முதுதமிழரின் வரலாற்று புகழ்களையும் நாம் அனைவரும் பெருமையுடன் போற்றிடுவோம்.

தனஞ்சய முத்தரையர் :

        


      தஞ்சாவூர் வரலாறு என்றாலே மன்னர் தனஞ்சய முத்தரையர் உருவாக்கிய நகரம் என்று நாம் அனைவருக்கும் தெரியும். கி.பி. 7 ஆம் நூற்றாண்டில் (கி.பி.645) தமிழகத்தில் சோழமண்டலத்தை ஆட்சிப்புரிந்தவரே மாமன்னர் தனஞ்சய முத்தரையர் ஆவார்.

இவரது இயற்பெயராக குணமுதித தனஞ்சயா என்றும் புனைப்பெயராக விடேல்விடுகு குவாவன் முத்தரையர் என்றும் வரலாற்று அறிஞர்கள் சிலர் கூறுகின்றனர். இம்மன்னர் வல்லம் (தஞ்சை), திருச்சி, புதுக்கோட்டை  பகுதிகளை தன்கட்டுப்பாட்டில் சிறப்பாக ஆட்சிபுரிந்துள்ளார்.

இம்மன்னர் பல நீர்நிலைகளை ஏற்படுத்தியும், குடைவரை கோயில்களும், சமயநெயுடன் ஆன்மீக தலங்கள் பலவற்றையும் எடுப்பித்துள்ளார். தனது ஆட்சியில் ஆன்மீகம் மற்றும் நகரங்களை செம்மைபடுத்துவதில் அதீத விருப்பம் கொண்ட இவர் மக்கள் நலன்காத்து சிறப்பான நல்லாட்சி புரிந்த மாமன்னராக திகழ்ந்தவர்.

இம்மன்னரை பற்றிய கல்வெட்டுகளும், வரலாற்று சுவடுகளும் காலமாற்றத்தில் அழிந்துவிட்டதால் முழுவதுமாக இன்றளவும் பெரியளவில் கிடைக்கப்பெறவில்லை. ஆனாலும், தொல்லியியல் வரலாற்று ஆய்வாளர்களின் கூற்றுப்படி முதலாம் குவாவன், புகழ்ச்சோழன் என்ற பட்டப்பெயருடன் இவரை சில கல்வெட்டுகளில் அறிவதன் மூலம் இம்மன்னரது ஆட்சிக்காலத்தில் ஏற்பட்ட வரலாற்று சிறப்புகளை ஓரளவேனும் நாம் தெரிந்துகொள்ள முடிகிறது. இவரே தமிழகத்தில் சோழமுத்தரையர் அரசாட்சியை உருவாக்கியதாக அறிய முடிகிறது.

மேலும், என்றும் அழிக்கமுடியா வரலாறாக, தமிழகம் மற்றும் ஆந்திரா (கடப்பா) பகுதிவரையுள்ள பகுதிகளை ஆண்ட மகேந்திர விக்ரமசோழனின் மகனாகவும், சோழ மகாராஜா எனும் புண்ணியகுமார முத்துராஜ் மன்னரின் அண்ணனாகவும் குறிப்பிடப்படுகிறார். ரே-நாட்டு சோழ முத்தரையர் மரபில் ஆண்டுவந்த நந்திவர்ம சோழனின் வாரிசாக கூறப்படும் இம்மன்னரது முன்னோர்கள்,

தனஞ்சயவர்ம முத்தரையர் (தாத்தா)
மகேந்திர விக்ரமன் (தந்தை)
புண்ணியகுமார முத்துராஜ் (சகோதரர்)
என்றும் வரலாற்று குறிப்புகள் தெளிவாக எடுத்துரைக்கிறது.


காவிரி மற்றும் வேளாண்மை காத்த வேந்தர்களாகவும் திகழ்ந்த முத்தரையர் மன்னர்கள் வரலாற்று பூர்வமாகவும் தஞ்சையின் மைந்தர்களாகவே முத்தரையர்கள் குறிப்பிடப்படுகின்றனர். 

தமிழர் பெருங்குடி மக்களாகிய நாமும் போற்றுவோம்..
முதுதமிழ் அரையர்களே வாழ்க...வாழ்க...!!