அய்யா குழ.செல்லையா முத்தரையர் (EX_MLA).
அய்யா அம்பலத்தாரின் புகழ்பாடும் சில வரிகள் :
*அரசியல் வரலாற்றில் சுயேச்சையாக வெற்றிகண்ட தனித்துவ அடையாளம் கொண்டவர்.
திராவிட அரசியலில் பொருளாதார அதிகாரம் இல்லாமல் மக்கள் ஆதரவுடன் தனித்து நின்று சிங்கம் சின்னத்தில் வென்ற சுயேச்சை நாயகன்.
*மக்களின் நல்வாழ்விற்காக நித்தமும் அயராது உழைத்த மாமனிதர்.*
*ஆண்ட வம்சத்தின் அரசியல் அதிகாரம் மீட்க போராடிய மன்னர்.*
*அஇஅதிமுக கட்சி துவங்குகையில் 3 வது ஆளாக கையெழுத்திட்டு, உறுதுணையாக இருந்தவர்.*
*MGR அவர்களாலும், அரசியல் வட்டாரத்தில் பிறராலும் *தொகுதி சிங்கம், அம்பலத்தான், சொல்லரசு செல்லயா* என்று மதிப்புடன் போற்றப்பட்டவர்.
*மக்களின் நலன்காத்த மைந்தன் தனது கடைசி காலத்தில் ஏழ்மையான நிலையிலே உயிர்நீத்த *உத்தம அரசியல் ஆசான்.*
என்றும் வாழ்க...!
அய்யா சொல்லரசு அம்பலத்தாரின் புகழ் ஓங்குக..!!🙏🙏🙏
அய்யாவின் வாழ்க்கை நினைவுகள் :👇👇
ஒரு மனிதனின் மரணத்தில் தெரியும் என்பார்கள் அவன் வாழ்ந்த வாழ்க்கைக்கான அர்த்தம், ஆயிரமாயிரமாய் திரண்டு வந்து அஞ்சலி செலுத்தியவர்களை காணும்போது அப்படி ஒரு நல்வாழ்க்கையை சொல்லரசுவும் வாழ்ந்திருப்பதை உறுதிபடுத்தியது.
1971 இன்றுபோல எந்த தொழில்நுட்ப வசதியும் இல்லாத காலகட்டம், பொது போக்குவரத்தும் பெரிய அளவில் இல்லாத காலம், அந்த காலத்தில் புதுக்கோட்டை மாவட்டத்தின் எல்லையில் துவங்கி தஞ்சை மாவட்டத்தின் கடற்கரை மற்றும் உள்பகுதி முழுவதும் பரவி இருந்த பெரிய தொகுதியான பேராவூரணி தொகுதி உட்பட தமிழ்நாடு முழுவதும் சட்டமன்ற தேர்தல்...
35 வயதே நிரம்பிய இளைஞன் ஒருவன் திமுகவின் தீவிர தொண்டன், ஆர்வத்தோடு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கேட்கிறான் கட்சியில், கடைந்தெடுத்த அயோக்கியர்களின் கூடாரத்தில் இள வயதுகாரனுக்கு, அதுவும் ஒரு அறியப்படாத, அரசியல் அரிசுவடி அறியாத சாதியில் பிறந்தவனுக்கு சீட்டா...? என்று எள்ளிநகையாடி வாய்ப்பு மறுத்து அரசியலில் கரைகண்ட கிருஷ்ணமூர்த்தியை வேட்பாளராக அறிவிக்கிறது திமுக. வெகுண்டெழுந்த அந்த இளைஞன் அப்போதே தீர்மானிக்கிறான் "தான் தான் பேராவூரணி சட்டமன்ற உறுப்பினர்" என்று.
சுயேட்சையாக களம் காண தீர்மானித்தாகிவிட்டது, அதிர்ஷ்டமான முத்தரையர்களின் அடையாளம் "சிங்கம்" சின்னமும் கிடைக்கிறது.
(இதுதான் முத்தரையர் சமுதாய விடிவெள்ளி திரு. வேட்டையன் மூப்பனார் போராடிய சிங்கம் சின்னம் *முத்தரையர் சின்னமாக மாறிய தருணம்*....,
ஓய்வில்லாமல் ஒவ்வொரு கிராமமாக சுற்றி அவ்வளவு பெரிய தொகுதி முழுவதும் சுற்றி எல்லா மக்களையும் நேரில் சந்தித்து ( வேறு வழியே இல்லை நேரில் மட்டுமே சந்திக்க முடியும்) தன்னுடைய கணீர் குரலெடுத்து பேசி வாக்கு கேட்க, அறியாமையும், படிப்பறிவும் இல்லாத மக்களுக்குள் அந்த பேச்சுக்கள் ஏதோ தீப்பொறியை பற்றவைக்க 2020 வாக்குகள் வித்தியாசத்தில் "பேராவூரணி சட்டமன்ற உறுப்பினர்" ஆக தேர்வாகிறார் திரு.மிகு. சொல்லரசு குழ.செல்லையா...!
இருந்தாலும் தனக்கு வாய்ப்பு மறுத்த கட்சிக்கு பாடம் புகட்ட மறக்கவில்லை இந்த மன்னர் குல மாணிக்கம்...
திமுகவுக்குள் உட்கட்சி குழப்பம் ஒன்று வருகிறது திமுக பொருளாளர் எம்.ஜி.ஆர் கட்சியின் தலைவர்கள் அனைவரும் தங்கள் சொத்துகணக்கை காட்ட சொல்கிறார், சொத்துக்கணக்கை காட்டுவதென்றாலே அன்றைய முதல்வர் கருணாநிதிக்கு அலர்சியாகிறது, பூசல் முற்றி எம்.ஜி.ஆர் கட்சியில் இருந்து நீக்கப்படுகிறார்.
புதிதாக அண்ணாவின் நாமம் தாங்கி "அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தை" தோற்றுவிக்கிறார் எம்.ஜி.ஆர் அவரோடு (அவரையும் சேர்த்து) 4 சட்டமன்ற உறுப்பினர்கள் திமுகவில் இருந்து வெளியேறுகிறார்கள், எம்.ஜி.ஆர் குழ.செல்லையாவையும் கட்சிக்கு அழைக்கிறார் நேராக கட்சிக்குள் சென்றிருக்க முடியும். ஆனால் அப்படி செய்யாமல் ஒரு காரியம் செய்கிறார், திமுகவோடு பேச்சுவார்த்தை நடத்துகிறார் "உங்கள் கட்சிக்கு திருப்பி வருகிறேன் என்று" உட்கட்சி குழப்பம் மிகுந்த அந்த நேரத்தில் ஒரு சுயேட்சை சட்டமன்ற உறுப்பினர் கட்சிக்கு வருவது நல்லதுதான் என்று அரசியல் சாணக்கியர் கலைஞர் கருதுகிறார், சரியென சம்மதிக்கிறார், இவரும் கட்சியில் இணைகிறார். அடுத்த நாளே "திமுக சட்டமன்ற உறுப்பினர் அதிமுகவில் இணைந்தார்" என நாளேடுகள் செய்தி வெளியிட அரசியல் சாணக்கியர் முகத்தில் ஈ ஆடவில்லை, அதனால்தான் எம்.ஜி.ஆர் குழ.செல்லையாவை "எல்லாருக்கும் தலையில மூளை, செல்லையாவுக்கு மட்டும் உடம்பெல்லாம் மூளை" என்று. அப்படி மூளையோடு இருப்பவனை யார்தான் சீராட்டி பாராட்டி வைத்துக்கொள்வார்கள் ? அதனால்தான் அரசியல் அரங்கில் அவரால் கோலச்ச முடியவில்லை...
அவரோடு அதிமுகவின் முதல் படிவத்தில் கையெழுத்து போட்ட 12 பேரில் எம்.ஜி.ஆருக்கும் குழ.செல்லையாவுக்கும்தான் கல்வி நிறுவனங்கள் கிடையாது என்பதுதான் குழ.செல்லையாவின் சம்பாத்தியம்.
1906 ஆம் ஆண்டு முத்துராஜா மஹாசன சங்கம் தொடங்கி இருந்தாலும், சில மாநாடுகள் பல இடங்களிலும் நடத்தி இருந்தாலும், தமிழகமே அதிரும் வண்ணம் ஒரு பிரமாண்டமான #முத்தரையர் மாநாட்டை நடத்தி அதில் அன்றைய முதலமைச்சர் எம்.ஜி.ஆரை மேடையில் ஏற்றி "முத்தரையர்களுக்கு" இன்றுவரை தொடரும் அமைச்சரவை பங்களிப்பை உறுதி செய்த பெருமையும் திரு.குழ.செல்லையாவையே சேரும்...
எம்.ஜி.ஆர் அதிமுக தொண்டர்களை முட்டாள்களாக வைத்திருக்க எண்ணி தனது கட்சி தொண்டர்கள் அனைவரும் கட்சியின் சின்னத்தை கையில் பச்சை குத்திக்கொள்ள வேண்டும் என்று அறிவிக்கிறார், இயல்பிலேயே சுயமரியாதை கொண்டவர் இதனை எதிர்த்து கட்சியில் இருந்து வெளியேறுகிறார். பின்னர் "தமிழ்நாடு முத்தரையர் சங்கத்தில்" தலைவராக சிறிதுகாலம் பணியாற்றுகிறார்...
2001 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் அன்றைய ஆளும்கட்சியான திமுக ஒரு கூட்டணி அமைக்கிறது, தமிழக அரசியல் வரலாற்றில் முதல்முறையாக ஒரு சாதிசங்கம் கூட்டணியில் இடம்பெருகிறது, அதற்கு முன்புவரை தேர்தல் கூட்டணி என்றாலே அது அரசியல் கட்சிகளுக்குள் மட்டுமே தொகுதி பங்கீடாக இருக்கும் அன்றைக்கு திமுக அமைத்த கூட்டணியில் #முத்தரையர்களின் அரசியல் கட்சியாக இருந்த கு.ப.கிருஷ்ணனின் "தமிழர்பூமியும்" குழ.செல்லையாவின் "தமிழ்நாடு முத்தரையர் சங்கமும்" அங்கம் வகிக்கிறது.
அந்த தேர்தலில் அதிமுக கூட்டணியில் அங்கம்வகித்த தமாகாவின் திருஞானசம்பத்தம் (முத்தரையர்) எதிர் வேட்பாளர் அவரிடம் 28659 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைகிறார்.
தொடர்ச்சியாக அரசியலில் பயணப்பட்டாலும் பெரிதாக எதையும் அவருக்காகவோ ,அவர் சார்ந்த சாதிக்காகவோ சாதித்துவிட முடியவில்லை அதே நேரம் அவரை தவிர்த்துவிட்டு முத்தரையர் வரலாற்றை எழுதிவிடவும் முடியாது.
எண்ணற்ற வரிகளில் போற்றிப்பாட வேண்டிய அய்யாவின் வாழ்க்கை சரிதை என்பது ஓர் வரியில் சொல்லுகையில்,
அய்யா சொல்லரசு அவர்கள் *உத்தம மக்கள் தலைவர்*
அரசியல் அதிகாரத்தில் பொருளாதாரத்தில் உயரும் அரசியல் தலைவர்கள் மத்தியில்,
மக்களின் நலன் காத்திட அயராது உழைத்து "உத்தம தலைவனாக மக்கள் மனதில் உயர்ந்த மாமனிதர்".
அய்யாவின் இறப்பு :
நவம்பர் 23/2017 அன்று அய்யா இயற்கை எய்தினார்.
*நவம்பர் 23 அம்பலத்தார் நினைவேந்தல்*
" சிங்கம் சின்னத்தில் சுயேச்சையாக வெற்றிகண்ட"
*சரித்திர நாயகனுக்கு நவம்பரில் நினைவு அஞ்சலி.
சொல்லரசு அய்யாவின் பெருமைகளை நாளைய தலைமுறைக்கு வழிகாட்டலுடன் போற்றிடச் செய்வோம்.......
பேராவூரணி மைந்தன் அய்யா சொல்லரசு செல்லையா அம்பலம் புகழ் ஓங்குக...
மண்ணில் மறைந்து மக்கள் மனதில் வாழும் அம்பலத்தார் புகழ் மறையாது வாழட்டும்.....!!