Advertisement

பிற்கால சோழர்கள் உண்மை வரலாறு / Real History of CHOLAR / MUTHARAIYAR Dynasty

முத்தரையர் மரபினரே-
பிற்கால சோழர்கள்


   தமிழர்களின் மறைக்கப்பட்ட வரலாறுகள் உயிர்பெற்று உலகறிய வேண்டுமெனில், பிற்கால சோழர்கள் தோற்றம் மற்றும் கி.பி 2 முதல் கி.பி 9 வரை 5 நூற்றாண்டுகள் ஒட்டுமொத்த சோழதேசங்களை தன் கட்டுப்பாட்டில் வைத்திருந்து, மக்கள் போற்றும் பொற்கால ஆட்சி புரிந்த முத்தரையர் பேரரசின் கல்வெட்டுகள், வரலாற்று சான்றுகள் அனைத்தையும் நன்கு ஆராய்ந்து தெளிவுற வேண்டும்.

பிற்கால சோழர்களை பற்றிய வரலாறு அறியப்பட முக்கிய சான்றாகவும், முத்தரையர் மன்னர்களை தோற்கடித்து சோழர் ஆட்சி மீண்டும் வரலாற்றில் தோன்றியது எனும் கருத்துக்கள் மேலோங்கி நிற்க காரணமாகவும் இருப்பவர் #விஜயாலய சோழன்' ஆவார்.


ஆனால், விஜயாலய சோழன் மரபுவழி எது..??

விஜயாலயன் என்பது  இயற்பெயரா..?? அல்லது மன்னரின் புனைப்பெயரா...??

அவர் எவ்வாறு தஞ்சையில் அரியணை ஏறினார்..??

தஞ்சையை கைப்பற்றும் முன்னர் விஜயாலய சோழன் ஆட்சி மற்றும் அவரது தோற்றம் பற்றிய வரலாறு அறிய உதவும் சான்றுகள் எது...??

கி.பி. 850 காலத்தில் எந்த பெரும் போரில் தஞ்சை விஜயாலய சோழனால் கைப்பற்றப்பட்டது..??

முத்தரையர் மற்றும் பிற்கால சோழர்கள் ஒரே மரபுவழி தொடர்பை கொண்டிருந்ததை பல வரலாற்று சான்றுகள் கூறுகின்றன.

கரிகால சோழன் மரபாக அறியப்படும் முத்தரையர்களையும் அவர்கள் கலை முறைகளையும் தனது முன்னோர்களாக அப்படியே விஜயாலய சோழன் ஆட்சி காலத்திலும் நிலைத்திருக்க காரணம் என்ன..?

முத்தரையர் மன்னர்களுக்கும், பிற்கால சோழர்களுக்கும் வாரிசு ஆட்சி அதிகாரத்தின் அடிப்படையில் தான் தஞ்சை நகரம் விஜயாலய சோழன் வசமானது என்ற கருத்தும் ஆராய்ந்து ஏற்கதக்கது.


மேலும், விஜயாலய சோழன் வணங்கிய தெய்வமும் (நிசம்பசூதனி கொற்றவை தேவி) முத்தரையர் மன்னர்களின் வழிபாட்டு முறைகளும் (பிடாரி கொற்றவை, சிவ வழிபாடு) ஒன்றுதான் என்பதை வரலாற்றின் மூலம் எளிதில் அறிய முடிகிறது.



வரலாறு ஆதாரம் அடிப்படையில் முக்கிய சான்றுகள்:👇

1. முத்தரையர்களிடம் உள்ள #கரிகால் சோழ குழுவினரான சூரிய முத்தரையர் எனும் வரலாற்று செப்பேடு செய்தி சோழர் மரபினரை நேரடியாக அறிந்திட மிக முக்கிய ஆதாரமாக உள்ளது.

2. ரேனாட்டு சோழர்கள் எனும் முத்தரையர் அரச மரபினர் சோழ மகாராஜா என்றே வரலாற்றில் அறியப்படுகின்றனர்.

ஆதாரம் : தனஞ்சயவர்ம முத்துராஜா (எ) சோழ எரிகால் மகாராஜா.

புண்ணியகுமார முத்துராஜா (எ) சோழ மகாராஜா.

புகழ் சோழன், மணிமுடி சோழன் (எ) குவாவன் முத்தரையர்.



முத்தரையர்களே  சோழர்கள் - என்பதை நிரூபிக்கும் சில வரலாறு ஆதாரங்கள் :

1. கரிகால் சோழன் வழிவந்தவர்களாக கங்க தேசத்தை ஆண்ட வேளீர்குல மன்னர் துர்வீதனன் முத்தரையரின் கல்வெட்டு கூறுகிறது.

2. கரிகால் சோழனுக்கு பிறகு நேரடி சோழ மண்டல ஆட்சியில் முத்தரையர் அரசாட்சி பெயர்களை தாங்கிய சோழ-மன்னர்களே 450 ஆண்டுகள் ஆட்சிபுரிந்துள்ளர்.

3. வாரிசு பெயர்சூட்டல் மரபு  அடிப்படையில் புகழ்சோழன் (எ) குவாவன் முத்தரையர், மணிமுடி சோழன், விஜயாலய சோழன்,  விஜயாலய முத்தரையன், பெரும்பிடுகு - அக்ராணிபிடுகு, வளவன், வலைஞர் - கிள்ளிவளவன், மும்முடி சோழ முத்தரையன் - இருமுடி சோழன் போன்ற பல வரலாற்று செய்திகள் முத்தரையர் -சோழர்கள் குலவழி தொடர்பை உறுதிபடுத்துகிறது.

4. தன் முன்னோர்களது கலைகளைதான் பிற்கால மன்னர்கள் சீரமைப்பார், அவற்றை அழியாமல் பாதுகாப்பார்கள். அவ்வகையில் இளங்கோவதி முத்தரையரின் நார்த்தாமலை சோழீஸ்வரம் கற்கோயிலை விஜயாலசோழன் சீரமைத்து குறிப்பிடத்தக்கது.

சாத்தன் முத்தரையர் பூதீஸ்வரம் எனும் அக்கோயிலை வழிபட்டு விஜயாலய சோழீஸ்வரம் என பெயர்மாற்றம் செய்யப்பட்ட குலவழிபாடு சான்றும் குறிப்பிடத்தக்கது.

5. முத்தரையர்களின் கட்டிடக்கலையின் விஜயாலய சோழீஸ்வரம் (எ) சாத்தன் முத்தரையர் பூதீஸ்வரம் கற்கோயிலை அடிப்படையாக வைத்து ராஜராஜ சோழன் கட்டிய தஞ்சை பெரியகோவில் கட்டப்பட்டதின் பின்புல மரபு ஒற்றுமை ஆதாரம்.

6. பிற்கால சோழர்கள் ஆட்சி உருவாக விஜயாலய சோழன் தஞ்சை மரபு முத்தரையர்களை - திருப்புறம்பியம் போரில் வென்றான் எனும் மிகப்பெரிய வரலாற்று பொய், கற்பனை மற்றும் வரலாற்று குழப்பங்களும் சிறந்த ஆதாரமாக உள்ளது.

திருப்புறம்பியம் போர் நடந்தது கி.பி. 870 பிறகு. ( இது விஜயாலன் ஆட்சிக்கு பிறகு முதலாம் ஆதித்தன் காலம்)*.

 ஆனால் விஜயாலயன் மகன் காலத்து போரில் எப்படி விஜயாலசோழன் முத்தரையர்களை வென்று கி.பி. 850 காலத்திலேயே ஆட்சியை கைப்பற்றினார்.......?????

7. திருப்புறம்பியம் போர் பல்லவர்களுக்கும் பாண்டியர்களுக்கும் நடந்தது. இதில் பாண்டியர்களுக்கு துணையாக திருமயம், புதுகை மற்றும் வல்லம் மரபு முத்தரையர் மன்னர்களும், 

பல்லவர்களுக்கு துணையாக தஞ்சை, ரேனாட்டு சோழ முத்தரையர் மன்னர்களும் துணையாக நின்றது குறிப்பிடத்தக்கது.

8. விஜயாலய சோழன் தன் வாரிசு உரிமையில் முத்தரையர்கள் உருவாக்கிய தஞ்சை தலைநகரில் ஆட்சிப்பொறுப்பேற்க வேண்டி தன்முன்னோர்களிடமே முரண்பட்டு தஞ்சையை தன்வசமாக்கிருக்க வேண்டும் எனும் வரலாற்று கருத்து.

9. மிகப்பெரிய பேரரசாக ஆட்சியில் உள்ள சோழ மண்டல எல்லைகளை வாரிசு உரிமை இல்லாத அடிப்படையில் ஏறத்தாழ 450 வருடங்களை சோழர் எனும் ஆட்சிப்பெயர் எப்படி காணாமல் போனது...?

10. சோழ மன்னராக கூறப்படும் திருமங்கை ஆழ்வார் முத்தரையர் குலம் உதித்தவர் எனும் வரலாற்று குறிப்புகள் மேலும் சோழர் மரபு ஒற்றுமைக்கான சான்றாக உள்ளது..


11. சோழர்கள் வேளிர் வழிவந்த சூரிய குலத்தோர் என்ற வரலாற்றுடன் முத்தரையர் மன்னர்களும் வேளீர் வழி தோன்றிய சூரிய முத்தரையர்கள் என்ற குலமரபு ஒற்றுமை மேலோங்கி நிற்கிறது.

12. கொடும்பாளுர் வேளீர், கொள்ளிடக்கரை முத்தரையர்கள், தஞ்சை தலைநகர் ஆட்சி என்ற அதே மரபை பின்பற்றி கொடும்பாளூர் சோழர்கள், தஞ்சை தலைநகர் ஆட்சி (முத்தரையர்கள் - பிற்கால சோழர்கள்) எனும் அரசாட்சி ஒற்றுமை சிறந்த ஆதாரமாக இருக்கிறது.

ஆதாரம் :

  பொன்னியின் செல்வன், சோழ மண்டல சதகம், வேங்கையின் மைந்தன், ரேநாட்டு கல்வெட்டுகள், கட்டிடக்கலைகளும் ஓர் சான்றாகும்.

மேலும் பல கல்வெட்டுகள் மறைக்கப்பட்டும், சிதைக்கப்பட்டும் உள்ளது.


இன்னும் ஏராளமான வரலாற்று ஆதாரங்கள் இதுவரை பலர் எழுதிய புத்தகங்களில் சோழர்கள், முத்தரையர்கள் பற்றிய வரலாற்று கூற்றுகளிலே தெளிவாக ஆராயப்படாமல் உள்ளன.

உண்மையில் வரலாறு முற்றிலும் அழியவில்லை....!

கயவர்களால் அழிக்கப்படுகிறது....!

சில வரலாறு ஆய்வாளர்களின்  கற்பனை, அவர்களின் சுயசாதி பற்று, அரசியல் மாற்றங்கள், காலநிலை இயற்கை சீற்றங்கள் ஆகிய காரணங்களால் மேலும் பல அழிந்துள்ளன... 

முத்தரையர் சோழர் வரலாற்றிற்கு முரணாக திணிக்கப்பட்டுள்ளன என்பதே மறுக்கமுடியா உண்மை.


சோழர் & முத்தரையர்கள்
போர்களில் மோதவில்லையே -

 ஏன் ?


    சோழர் மற்றும் முத்தரையர் அரசாட்சி பெயர் வேறுபாட்டையும், உண்மையான வரலாறு சுவடுகளை கண்டறிய முடியாத கற்பனை வரலாற்று குழப்பத்தையும் வைத்து இன்றளவும் தமிழ் மன்னர்களின் வரலாறு மறைக்கப்பட்டும், அழிக்கப்பட்டும் வருகிறது.

வரலாற்று குழப்பத்தை ஏற்படுத்திய ஆசிரியர்களும் பிற்கால சோழர்கள் பற்றி எதுவுமே தெளிவாக எடுத்துரைக்கவில்லை..


முத்தரையர் மற்றும் பிற்கால சோழர்கள் எவரும் போர்களில் மோதிக்கொண்டதாக வரலாறு இல்லை.. காரணம் இருவரும் ஒரே மரபை சார்ந்த மன்னர்கள்..

அதனால் தான் கரிகால் சோழ குழுவினரான சூரிய முத்தரையர் என்ற கல்வெட்டு செய்தியும், ரேநாடு சோழராக அறியப்பட்ட மன்னர் தம் பெயருடன் முத்துராஜா என அடையாளம் செய்துள்ளதும், தன்னை கரிகால் சோழன் மரபினர் என பல கல்வெட்டுக்களின் மூலமாக அறிந்து கொள்ள முடிகிறது.


வரலாறு குறிப்புகள் கூறுவது முத்தரையர் மற்றும் சோழர்கள் சூரிய குலத்தை சேர்ந்தவர். ஒரே வம்ச மன்னர்கள் ஆவர்.

முத்தரையர் அரசாட்சி, பிற்கால சோழர் அரசாட்சி என இரு வேறுபட்ட வரலாறு சுவடுகளினாலும், சில கற்பனை வரலாறு கூற்றுகளாலும் தான் அதிக வரலாற்று குழப்பம் ஏற்பட்டுள்ளது.. 


இதற்கு காரணம் உண்மையான வரலாறு மறைக்கப்பட்டு கற்பனைவாதிகளின் வரலாறு இன்றளவும் படிப்பதே பிழையானது..


விஜயாலய சோழன் முத்தரையர்களை போரிட்டு வெல்லவும் இல்லை.. கி.பி. 850 ல் தஞ்சையை கைப்பற்றினான் என்பது தவறு.. வரலாற்று ஆசிரியர்கள் கூறும் அந்த போர் கி.பி. 872ல் நடந்தது.. அது பாண்டியர் பல்லவர் போர்.. அப்போது விஜயாலய சோழர் மகன் முதலாம் ஆதித்த சோழனின் ஆட்சி காலம்..


திருப்புறம்பியம் போர் ஒன்றை வைத்தே தவறான வரலாற்று மூடர்கள் சோழர் முத்தரையர் வரலாற்றில் குழப்பத்தை உருவாக்கியுள்ளனர்..


கி.பி. 850 முத்தரையர் மரபு வாரிசாக விஜயாலய சோழன் தஞ்சையில் அரியணை ஏறினார் என்பதே மறுக்கமுடியாத உண்மை வரலாறு.


சோழர்கள் வேறு முத்தரையர் வேறு என கூறியவர்களிடம் சில கேள்விகள் :


1. கி.பி. முதலாம் நூற்றாண்டிலேயே கரிகால் சோழனில் பல போர் வெற்றிகளில் சோழர் நாடாக கூறப்பட்ட எல்லைகளை எப்படி முத்தரையர் நாடு என வரலாற்றில் கூறப்பட்டது ??.


2. கரிகால் சோழனுக்கு பிறகு எந்த சோழ மன்னரை தோற்கடித்து முத்தரையர் மன்னர்கள் முத்தரையர் அரசாட்சியை நிறுவினர் ...?


3. சோழப்பேரரசை முத்தரையர் எனும் குறுநில மன்னர்கள் எப்படி வீழ்த்தினர்..?? அவ்வாறெனில் பேரரசை வீழ்த்திய வீரமிக்க முத்தரையர் மன்னர்களை ஏன் அவ்வாறு குறிப்பிடவில்லை ..?


4. சோழ தேசத்தை தன் கட்டுப்பாட்டில் வைத்து சோழர் பெயர் தடையமே இல்லாமல் கி.பி. 5 முதல் கிபி.10 நூற்றாண்டு வரை எப்படி முத்தரையர்களால் ஆள முடிந்தது...?.


5. முத்தரையர் அரசாட்சியான 4 நூற்றாண்டுகளில் ஏன் ஒருமுறை கூட முத்தரையர் மீது சோழர் மரபு மன்னர் எவருமே போர்தொடுக்கவில்லை ..??.


6. சோழர் மற்றும் முத்தரையர் மன்னர்கள் போர்களில் மோதிக்கொண்ட வரலாறு கல்வெட்டுகள் ஒன்றுகூட இல்லையே ஏன்....???


7. கரிகால் சோழன் மரபாக முத்தரையர் மன்னர்களின் கல்வெட்டுகள் கூறுகின்றன ‌‌‌.... அதன் அர்த்தம் என்ன..??


8. சோழர்கள் மற்றும் முத்தரையர் மன்னர்கள் இருவரும் வெவ்வேறு மரபு எனில் சோழர் -சூரிய குலம், முத்தரையர் -சூரிய குலம் எனும் வரலாற்று ஒத்துமை எப்படி ??


9. கரிகால் சோழன் வரலாறும், முத்தரையர் மன்னர் வரலாறும் மீனவ (வலையர்) வரலாற்றோடு ஒன்றியுள்ளதே.... அது எப்படி..??


10. விஜயாலய சோழன் எங்கிருந்து வந்தான்..?? எப்படி தஞ்சையை கி.பி. 850 கைப்பற்றி அரியணை ஏறினான்..??


11. முத்தரையர் மன்னர் கட்டிய கோயிலை சீரமைத்து விஜயாலய சோழீஸ்வரம் என வரலாற்றில் அழியா சின்னத்தை உருவாக்க அவசியம் என்ன...??


12. முத்தரையர் மன்னரிடம் விஜயாலய சோழன் போரிட்டு தஞ்சை கைப்பற்றிய வரலாற்று செய்தியை எந்த கல்வெட்டு கூறுகிறது...??


13. திருப்புறம்பியம் போரில் தான் தஞ்சை மீட்கப்பட்டது எனில் அந்த போர் நடந்த வருடம் எது...??? அப்போதைய சோழ மன்னன் முதலாம் ஆதித்தன் கல்வெட்டு செய்தி எங்கே....??? 


14. திருப்புறம்பியம் போர் கி.பி. 871 -872 ஆண்டில் நடந்ததாக வரலாறு கூறுகிறது.. அப்படியானால் கி.பி. 850 ஆண்டில் தஞ்சையை கைப்பற்றி எப்படி அரியணை ஏறி தஞ்சைக்கு மன்னர் ஆனார் விஜயாலய சோழன்...?? 


15. ரேநாட்டு சோழர்கள் என்று வரலாற்றில் கூறப்படும் மன்னர்கள் ஏன் தம் பெயருடன் முத்துராஜா, முத்தரையர் என கல்வெட்டுகளில் குறிப்பிட்டுள்ளனர்...???


16. விஜயாலய சோழனின் மூதாதையர் யார்....? அவர் எந்த மரபை சார்ந்தவர்...??அவருக்கு முடிசூட்டிய மன்னர் யார்..??


இன்னும் ஏராளமான கேள்விகள் உள்ளன... இவை அனைத்திற்கும் வரலாற்று விடயம் ஒன்று சரியாக கிடைக்கும் எனில் நிச்சயம் உண்மை வரலாறு அனைவராலும் அறிந்து கொள்ள முடியும்.

வரலாற்று ஆய்வாளர்கள் சோழர் வரலாற்று குழப்பத்தை தகர்த்து, உண்மையான வரலாற்றை வெளிக்கொண்டுவர வேண்டும். முயற்சி செய்யுங்கள்.....!


வரலாற்றை நடுநிலையோடு ஆராய்ந்து நன்கு படித்து அறிந்தோர்களுக்கு தெரியும் உண்மை வரலாறு.

மறைக்கப்பட்ட முத்தரையர் - சோழர்கள் வரலாறு மட்டுமின்றி தமிழினத்தின் மூத்தகுடி அரச மரபினர் வரலாறு மீட்பது நம் கடமை.


சோழர் வரலாற்று தேடல் தொடரும்......