தமிழகத்தில் அரசமரபு முத்தரையர்களின் *மக்கள்தொகை, பொருளாதாரம் அடிப்படையில் பிற்படுத்தப்பட்ட பட்டியலில் முத்தரையர்களுக்கு 20% தனி உள்இட ஒதிக்கீடு வேண்டும். (BC-Mutharaiyar)*.
திருச்சி விமான நிலையத்திற்கு *பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் பன்னாட்டு விமான நிலையம்* என்ற நீண்டகால கோரிக்கை நிறைவேற்றல் வேண்டும்.
வலையர் புணரமைப்பு நலவாரியம் அமைத்திட வேண்டும்.
கலைகளிலும், வீரத்திலும் சிறந்து, தமிழுக்கு மெய்க்கீர்த்தி கண்டு, பொற்கால ஆட்சிபுரிந்த தமிழ் பேரரசரை போற்றிடும் வகையில் அரசு கல்லூரிகளுக்கு பேரரசர் முத்தரையர் கல்லூரி என்றும்,
தஞ்சை தமிழ் பல்கலைக்கழகத்திற்கு *பேரரசர் முத்தரையர் தமிழ் பல்கலைக்கழகம்* என்று பெயர் சூட்டிட வேண்டும்.
இந்த முக்கிய மூன்று கோரிக்கைகள் அரசாண்ட முத்தரையர் சமுதாயத்தின் நீண்டகால எதிர்பார்ப்பில் உள்ளது. இதை தமிழகத்தில் செய்துதருபவய்களுக்கு அரசியலில் ஆதரவு அளிக்க ஒருமித்தமான உறுதியை கொண்டுள்ளனர்.
மேலும் மாவட்டம் வாரியாக இதர வரலாற்று சிறப்புகளுக்கான ஒட்டுமொத்த முத்தரையர்களின் சில முக்கிய கோரிக்கைகள் பின்வருமாறு...
தஞ்சை மாவட்டம் :
1. வல்லம் கோட்டை பகுதியை மீட்டு முத்தரையர் மன்னர்களின் வரலாற்று நினைவுகள் அடங்கிய பிரமாண்ட மணிமண்டபம் வேண்டும்.அந்த வளாகத்தில் 14 போர்களில் தன்னிச்சையாக வெற்றிகொண்ட பேரரசர் சுவரன்மாறன் முத்தரையருக்கு 14அடி உயர வெண்கலசிலை அமைத்திட வேண்டும்.
2. தஞ்சை அரண்மணையில் பேரரசர் சுவரன்மாறன் சிலை அமைக்க வேண்டும்.
(தஞ்சையை உருவாக்கிய தனஞ்சய முத்தரையர் திருவுருவத்துடன், அம்மன்னரின் வரலாறும், தஞ்சையை சீரமைத்து தலைநகராக்கிய தஞ்சைக்கோன் எனும் பேரரசர் பெரும்பிடுகு முத்தரையரின் வரலாறும் கூறப்படவேண்டும்).
3. தஞ்சாவூர் உருவாகி 15 நூற்றாண்டுகள் வரலாறு என்பதையும், தஞ்சையை உருவாக்கிய மாமன்னர் தனஞ்சய முத்தரையரையும் போற்றி தஞ்சை புதிய பேருந்து நிலையத்திற்கு மாமன்னர் தனஞ்சய முத்தரையர் பேருந்து நிலையம் என பெயர்சூட்ட வேண்டும்.
4. தஞ்சை நகர் மத்தியில் மாமன்னர் தனஞ்சய முத்தரையருக்கு (அல்லது பேரரசர்) திருவுருவ வெண்கலசிலை அமைக்க வேண்டும்.
5. தஞ்சை - பட்டுகோட்டை சாலையில் ஏற்கனவே இருந்த மனுநீதி சோழன் நினைவு வளைவு மீண்டும் புறநகர் முக்கிய சாலையில் அமைத்திட வேண்டும்.
திருச்சி மாவட்டம்:
1.திருச்சி விமான நிலையத்திற்கு பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் பன்னாட்டு விமான நிலையம் என்ற நீண்டகால கோரிக்கை நிறைவேற்றல் வேண்டும்.
2. பேரரசர் சிலையுடன் கூடிய மணிமண்டபம் அமைக்க துரித முயற்ச்சிகளை அரசு மேற்கொள்ள வேண்டும்.
3. சத்திரம் பேருந்துநிலையத்திற்கு அப்பகுதி மக்களின் நீண்டகால கோரிக்கையான அண்ணாமலை முத்துராசா பேருந்துநிலையம் என பெயர்மாற்றம் வேண்டும்..
அல்லது சுதந்திர வீரர் முத்தையா முத்துராஜா பெயர்சூட்டிட வேண்டும்.
மதுரை மாவட்டம் :
1. விமான நிலையத்திற்கு நிலம் தானமளித்த முத்தரையர்களுக்கு நன்றிகடனாக முதுதமிழ்குடி & இந்துக்களை போற்றி சிவகண்ணப்ப நாயனார் விமான நிலையம் என பெயர்சூட்ட வேண்டும்.
அல்லது, மதுரைக்கு சிறந்த மீனாட்சி அம்மன் பெயரையும், இந்தியாவிற்கு பெருமை சேர்த்த அய்யா அப்துல்கலாம் பெயரை சூட்டிட வேண்டும்.
2. மதுரை மத்திய நகரில் பேரரசர் பெரும்பிடுகு முத்தரையருக்கு வெண்கல சிலை அமைக்க வேண்டும்.
3. அலங்காநல்லூர் முகப்பில் *தமிழரின் பாரம்பரிய ஜல்லிக்கட்டு (ஏறுதழுவுதல்) நினைவுச்சின்னங்களும், வளாகமும் வேண்டும்.*
புதுக்கோட்டை மாவட்டம்:
1. உலகப்புகழ் தஞ்சை பெரியகோவிலுக்கு முன்மாதிரியான கட்டிடக் கலையில் விஜயாலய சோழீஸ்வரம் எனும் சாத்தன் பூதீஸ்வரம் கற்கோயிலை கட்டிய இளங்கோவதி முத்தரையர் மன்னருக்கு சிலை அமைத்திட வேண்டும்.
2. முத்தரையர்கள் காலத்து கோயில்கள், சிற்பங்கள் அனைத்தும் பராமரித்து, வரலாற்றின்படி முத்தரையர் மன்னர்களது மன்னர்களுக்கு சிலை அமைத்திட வேண்டும்.
3. புதுகை மத்திய பகுதியில் பேரரசர் பெரும்பிடுகு முத்தரையருக்கு தமிழகத்தில் மிக உயரமான வெண்கல சிலை அமைத்து தமிழ் மாமன்னரின் வரலாற்றை உலகறிய போற்றிட வேண்டும்.
இராமநாதபுரம் மாவட்டம் :
1. தனுஷ்கோடி மைந்தன் நீச்சல்காளி அம்பலத்திற்கு திருவுருவ சிலையும், நினைவிடமும் அமைக்க வேண்டும்.*சென்னை தலைநகர் :*
முத்தரையர்களின் தலைமை நாடாக இருந்த திருச்சி,புதுகை, தஞ்சை பகுதி நெடுஞ்சாலையில் முத்தரையர் நினைவு வளைவு அமைக்க வேண்டும்.
இன்னும் இதர மாவட்ட நினைவு சின்னங்களை பாதுகாத்து தமிழரின் வரலாற்றை போற்றிட வேண்டும்.
முத்தரயைர் சமுதாயத்தின் வரலாற்று பெருமைகளை போற்றி நீண்டகால கோரிக்கைகளை தமிழக மாநில அரசுகள் மற்றும் தேசிய கட்சிகள் கவனத்தில் கொண்டு நிறைவேற்றினால் 3 கோடி தமிழக முத்தரையர்கள் நிச்சயம் அரசியலில் ஆதரவளிப்பார்கள்.👍🙏
சங்ககால முத்தரையர்களை போற்றுவோம்...
